கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் எனும் தொனிபொருளின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேட்கொள்ளபடும் அபிவிருத்தி வேலைத்திட்ட்தின் ஒன்றான கோட்டைக்கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் வேலைத்திட்டமானது தற்போது ம.தெ.எ.ப.பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இச் செயற்பாட்டில் நமது கிராமத்தை சேர்ந்த விளையாட்டுக்கழக இளம் விளையாட்டு வீரர்களும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இம் மைதானம் புனரமைக்கப்படுவதன் மூலம் கிராமத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
விளையாட்டில் ஆர்வம் கொண்ட புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் எமது கிராமத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குவதன் மூலம் இவ் விளையாட்டு மைதானத்தை சிறந்ததோர் விளையாட்டு மைதானமாக மாற்றமுடியும்,
உதவி செய்ய விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளவும்.
"சிறுதுளி பெரு வெள்ளம்"
No comments:
Post a Comment