திருமணமாகி 8 வருடங்களுக்குப் பின், ஜோதிகா இன்று மீண்டும் அரிதாரம் பூசியிருக்கிறார்.
கடந்த 2006-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட ஜோதிகா நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார். திருமணத்திற்குப் பிறகு இவரை மீண்டும் நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்த போதும் இவர் எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. கணவர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் எடுத்த குறும்படம், சில விளம்பரப் படங்களில் மட்டும் நடித்தார்.
ஆனால் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற படம் ஜோதிகாவின் மனதை மாற்றியது. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில்லை என்றிருந்த இவரை இந்தப் படம் மீண்டும் நடிக்க இழுத்து வந்துவிட்டது. ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில்தான் இப்போது ஜோதிகா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று டெல்லியில் துவங்கியது.
ஜோதிகாவின் கணவராக ரகுமான் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ மலையாள படத்தை டைரக்டு செய்த ரோஷன் ஆன்ட்ரூசே இந்த படத்தையும் டைரக்டு செய்கிறார். சூர்யாவின் ’2டி’ என்ற சொந்த பட நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
No comments:
Post a Comment