பகுதி 25 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 6, 2014

பகுதி 25

எழுதுபவர் நயினை விஜயன் அவர்கள் யேர்மனி

எத்தனையோ பேர் வெளிநாடுபோய் அனுப்புறம் என்று சொல்லி வாங்கியவை 5 வருசமாகியும் தொடர்பே இல்லை  சீலன் போய் குறுகிய காலத்துக்குள்ள கடனை திருப்பிவிட்டியள்;…எல்லோரும்; சீலனாக முடியுமோ …? என்று வேற சொன்னார் தம்பி..!


மக்டொனால்சில  கிறில்ல கைபட்டு  கொப்பளித்த கையை ஒருதடைவை பார்த்துக்கொண்டான் சீலன்……!

„நல்லது அம்மா….!  வேற சொல்லுங்கோ…!.“

கலாவுக்கும்  சீலனுக்கும் இன்னும் ஒருமணிநேர இடைவெளியிருப்பதை  கடிகாரம் ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தது..!

„இல்லத்தம்பி….சீலன்… இனி அடிக்கடி கொழும்புக்கு வரவேண்டியிருக்கும்….! தங்கச்சியும்..கொழும்பில நல்ல பள்ளிக்கூடத்தில படித்தால்  ரஞ்சினியைப்போல  லண்டனில வேலைகிடைக்கும் என்று சொல்லுறா…“

„அதுதான் பார்வதி மாமியும் தனக்குத் தெரிந்த  ஒருகுடும்பம் வாறமாதம் லண்டன் போயினமாம் ……வெள்ளவத்தையில வீடு …..!  நானும் தங்கச்சியும் …வந்து இருக்கலாம் என்டு நினைக்கிறம். எதுவும் தம்பி உம்முடைய சம்மதத்தோடதான்….சீலன்…!“

ஒரே மூச்சில் அம்மா சொல்லி முடிக்க…. ஒரே மூச்சில  உயிரே போய்விடும்போல ….சீலனுக்கு  ! குரல்கேர   மேசையில இருந்த தண்ணீரை எடுத்து இணர்டு மிடறு குடித்தான்……!
..ம்…

„சொல்லுங்கோ…அம்மா…..“

„வீட்டுக்கு அட்வான்சைக் கொடுக்கட்டோ தம்பி…!இதை விட்டா வேற நல்ல இடம் கிடைக்காது அப்பு…..!“

„ம்….சரியம்மா…எவ்வளவு கேட்கீனம்..?“

„75 ஆயிரம்..! பாலன் மாhவுக்குப்போக மிச்சக்காசு இருக்கு…..சீலன்…“!

„சரியம்மா  கொடுங்கோ…!  சரி மாத வாடகை எவ்வளவு…சொன்னவை அம்மா?“
35 ஆயிரமாம் தம்பி…!

சீலனின் மூளை சுவிஸ் பிராங்குக்குள் புகுந்து ரூபாவுக்குள் மூழ்கியது…! அட மாதம்..350 பிராங்தானே  ….பரவாயில்லை… ! மலிவுதான் என கணப்பொழுதில் முடிவுக்கு வந்தது.

இங்கு பாடசாலை நாட்களில் வாய்ப்பாடு பாடமாக்கிறத விட  ஆங்காங்கே நாணயமாற்றங்களை நம்மவர்கள் நொடியில்….பெருக்கிப் பிரித்து மேய்வார்கள்.

„சரியம்மா…!  வேறு என்ன  வாறமாதம் தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு வாங்கோவன்…!“

„இன்னும் ஒரு விடயம் தம்பி…..! ஐ…..போன் ஒன்று கேட்டவள்……!சோனியோ இல்லாட்டி  கலக்சி என்று சொன்னவள் இப்ப இது தான் எல்லாரும் வைச்சிருக்கினமாம் …..அதுதான்……யோசிக்கிறன்;…!“

“அப்படியா அம்மா…சரி  நீங்க எப்ப ஊருக்குப்போறீங்க..!“

„இரண்டு நாட்கள் செல்லும்…சீலன்…!“

„நாளைக்கு  காசு அனுப்புகிறன் அம்மா…..தங்கச்சி கேட்டதை வாங்கிக் கொடுங்கோ….…!“

“சரி தம்பி ….வைக்கிறன். நாளைக்கு எடுக்கிறன்…..!“

“சரியம்மா……”

கலாவின் தொலைபேசி…..க்கு …நேரம்  சரியாக இன்னும்….சில நிமிடங்களே
கடிகாரம்…  சரியாகச் சொன்னது …!

தான் நாட்டில் இருந்தபோது அம்மா தங்கச்சிக்கு கேட்டதை வாங்கிக் கொடுக்க உழைப்பிருக்கவில்லை ….. இப்போ வெளிநாட்;டில…. அவர்கள் அனுபவிக்கட்டுமே..…! எல்லோரையும் போல அவனும்…!

அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கையொரு தெய்வம் என்றோ……!

பெருமூச்சொன்று அவனின் அனுமதியில்லாமலே வெளிப்பட்டது…..!

நீண்டநாட்களுக்குப் பின் அம்மாவுடன் பேசியதும் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றியதும் … பெரிய பேறாக  கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கெசாண்டான்….!

எதிர்காலத்தில் தன்னைப்போல….  பாசவலையில் சிக்குண்ட புலம்பெயர் உறவுகள்.., கேட்டக கேட்க பணம் அனுப்பி …அங்க இளசுகள்    சீரழிஞ்சு போறதாகப் பலர் கதைத்தாலும் செய்திகளாக வந்தாலும் இரத்த சொந்தங்கள் அனுபவிக்கட்டுமே என்ற ஆவலில் சீலனும் சிக்கிவிட்டதை கடவுளே நேரில் வந்த சொன்னாலும் அதை நம்ப சீலன் மட்டுமல்ல தாமே நேரில் அவஸ்தைப்படும் வரை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்…! வெளிநாடு வராதே இங்கு வாழ்க்கை சுலபமல்ல என்பதை நம்ப மறுக்கும் தாயக உறவுகள்போல….!


சூ+டாக கோப்பி கலந்து  குடித்தபடி  கலாவின் தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்தான் சீலன்….! கட்டிலில் தலையைச் சாய்த்தபடி …!


இரவு 12.00 மணியை தாண்டி முட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.கனடாவில் இப்போ6.00 மணி. இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களில்….அழைப்பு வரலாம்…..!

தாயும் ….தாரமும்…….பாச வயலில் விளையும் பயிர்கள் தானே…! ஓவ்வொரு பருவத்தையும்  இணைக்கும் உன்னத உறவுகள் தானே …!இரண்டு  உறவுகளையும் இணைப்பதிலும் பிரிப்பதிலும் காலம் தன் வேலையைச் செய்துகொண்டே இருக்கும்….!

“ட்;றிங்…ட்றிங்…..”

“ஹலோ…….”  ஆயிரம் மின்னல் தெறித்து  செவிவழி புகுந்து நெஞ்சை நிறைத்த அந்தக் குரல்
நிச்சயமாய் கலாதான்…….!

“வணக்கம்….கலா ….உன் சீலுதான்….”

“வணக்கம்… இப்ப புலம்பெயர்ந்த நாடுகள்ல வணக்கத்தோடு தான்…ஆரம்பம் எப்படி இருக்கிறீங்க சீலன் …?”

“நல்லா இருக்கிறன் கலா…”

இருவர் குரலும் தழுதழுக்க நிச்சயமாய் சீலன் கண்கள் இரு துளிகளை விட்டது போல் கலாவும் கண்களும் நிச்சயமாய்….! ஆயிரம் வார்த்தைகள் ஆயிரம் அர்த்தங்கள்…..அத்தனையும் அந்தத் துளிகளில் சங்கமமாகி நின்றன…!

எத்தனை மாதங்கள்….. எத்தனை சோதனைகள் …..!

சிறிது நேரம் மௌனம் …விம்மல் ….! சொல்லும்… கலா எப்படிப் படிப்புகள்….! வில்லங்கமாய் திசைதிருப்பிப் பேச முயன்றான்….சீலன்..!

“நல்லாப் போகுது இன்னும் 2 வருடங்கள் செல்லும்…என நினைக்கிறேன்..! பதிலுக்காய்  காத்து நின்றாள் ஏக்கத்தோடு… கலா..”

“உங்கள் படிப்பு வேலையெல்லாம் ….”

“இப்பதான் நல்ல வேலை கிடைத்து செய்து கோண்டிருக்கிறன் கலா…இரவுநேர பாடசாலைக்கு விண்ணப்பித்திருக்கிறன்….விரைவில் கிடைக்கும்…”

“அம்மா போன் பண்ணினவா….. உமக்குமுதல் அம்மாவுடன்தான் பேசிக்கொண்டிருந்தனான்..
எப்படி எல்லோரும் நலம்தானே….”

“ஓமோம்”

நடந்த உரையாடலை சுருக்கமாகக் கூறிமுடித்தான் சீலன்…!

சீலனின் குடும்பத்தாரை கலாவுக்குத் தெரியும் அன்பான குடும்பம். எதிர்கால மாமியார் குறித்து கலாவின் மனதில் ஒரு மகிழ்ச்சி….! கலா மட்டக்களப்பைச் சேர்ந்தவள் என்றாலும் யாழ்ப்பாணத்திலிருந்த சீலனின் வீட்டுக்கு இரண்டு மூன்றுமுறை சீலனுடன் போயிருக்கிறாள்.

சீலன், “சொல்லும்….கலா” என்கிறான்

“எவ்வளவோ கதைக்கவேண்டும் என நினைத்திருந்தன் ….ஒன்றும் ஞாபகமில்லை.”

கலா நிறுத்தி.-…. சீலனுக்கு விடையளிக்க விட்டாள்….!

கலா நானும் டொய்ச்சும் ஆங்கிலமும் படிக்க விண்ணப்பித்திருக்கிறன்..! எப்படியாவது படித்து டாக்டராகவேணும்…!என்ற இறுமாப்போடு இருக்கிறன்.!

“நாமிருவரும்  என்றோ ஒருநாள் தாயகம் சென்று நமது உறவுகளுக்கு எமது பணிகளைச் செய்ய வேண்டும்”

“இது தான் எனது…  இல்லை நமது லட்சியம் தானே கலா….”

“ஓம் டாக்டர் ஐயா….. கல கல என சிரித்தாள் கலா…….”
இந்த சிரிப்பை அவன் கேட்டு பல காலமாகி யிருந்தது..

குறும்பும் கலகலப்புமாய் நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தனர்

நாளை இருவருக்கும் விடுமுறை என்ற ஆறுதலில் நேரம் போவதை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை…..!

சீலன் நீங்கள் கனடாவந்து என்னோடு இணைந்து படிக்கலாம் தானே…..? நாம் பிறருக்காக வாழ நினைக்கும் அதே வேளை நமது வாழ்க்கையையும் பலமானதாக்க வேண்டாமா? அப்போது நமது பணி இன்னும் இரட்டிப்பாகும் அல்லவா..?   நினைத்தவுடன் ஒரு நாட்டுக்குள் வரவும் பிறிதொரு நாட்டுக்குள் செல்லவும் புலம்பெயர்  அகதித் தமிழனுக்கு முடியுமா……?

“சீலன் …. நான்  ஒரு முயற்சி செய்து பார்க்கப்போகிறேன்….!நீங்கள் ஒத்துழைத்தால்…வெற்றி கிடைக்கும் என நினைக்கிறேன்…”

“அது இப்போதுள்ள நிலையில் தெய்வசித்தம் கலா ….!தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் அல்லவா…சீலன்…..”

“நிச்சயமாக உமது முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்……”

“சீலன் …..உங்களுக்கு நித்திரை வந்துவிட்டது என நினைக்கிறேன்… நாளை எனக்கும் விடுமுறை … நிறையப் பேசவேண்டும்…..பேசுவோம்….”

கலா ஒரு  பறக்கும் முத்தத்தோடு போனை வைத்தாள்.


 தொடரும் 26    - பொலிகை nஐயா



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here