கிழக்கிலங்கையில் மட்டுநகரின் தெற்கே எழில் கொஞ்சும் கோட்டையூரில் குடிகொண்டு அடியார்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு புற்றடி ஸ்ரீ நாகலிங்கேஸ்வர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது கடந்த 03.11.2014 திங்கட்கிழமை காலை வினாயகர் வழிபாடு,கிராம சாந்தி,வாத்ம சாந்தி, யாக பூசை, கும்ப பூசை அலங்கார பூசைகளுடன் ஆரம்பமாகி 4.11.2014 செவ்வாய்க்கிழமை சுவாமி ஊர்வீதி வலம்வருதலும் இடம்பெற்று நேற்று 05.11.2014 புதன்கிழமை பகல் அஸ்டோத்திர (108) சங்காபிசேகமும் இரவு பொங்கல் பூசையுடனும் இவ்வருடத்திற்கான புற்றடி ஸ்ரீ நாகலிங்கேஸ்ரரின் அலங்கார உற்சவம் இனிதே நிறைவு பெற்றது. இவ் உற்சவ தினங்களில் பெரும்திரளான அடியார்கள் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டத்துடன் 3 தினங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
1ம் நாள் பூசை நிகழ்வுகள்
2ம் நாள் பூசை நிகழ்வுகள்
3ம் நாள் பூசை நிகழ்வுகள்
No comments:
Post a Comment