கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் ஒளி விழாவும், பாண்டு வாத்திய அங்குரார்ப்பண நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் இன்று (13.11.2014) காலை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு இரா.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், பிரதம அதிதியாக கோட்டக் கல்வி பணிப்பாளர் வி.திரவியராஜா அவர்களும்,
சிறப்பு அதிதிகளாக புனித அருளானந்தர் தேவாலய பங்குத் தந்தை அருட்திரு ஜி.அம்புறோஸ், மெதடிஸ்த தேவாலய போதகர் அருட்திரு எஸ்.சசிகுமார் திருக்கோவில் ஜெஸ்த மெனி கொஸ்பர் ஆலய சகோதரர் ஆர்.ஜெயக்குமார் கோட்டைக்கல்லாறு கிறிஸ்தவ சபை அருட்திரு ஸ்டீபன் பைகிரப்ட், கோட்டைக்கல்லாறு நாற்சதுர சுவிஷேச அருட் திரு றசிக்குமாரும் விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் நடேசமூர்த்தி ஆகியோரும், கௌரவ அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் க.சோதீஸ்வரன் மற்றும் சென்றல் பினான்ஸ் சிரேஸ்ர அலுவலக உத்தியோகத்தர் எம்.ஜோண் பிரசன்னாவும் கலந்து கொண்டனர்
பாண்டு வாத்திய முழக்கம் ,மங்கல விளக்கேற்றல் அருட்திரு எஸ்.சசிகுமாரின் ஜெபம்,அதிதிகளின் உரை, கலை நிகழ்வுகள், பரிசளிப்பு நிகழ்வு என்பன இடம்பெற்றது இப் பரிசளிப்பில் இவ்வாண்டு நடைபெற்ற ஆங்கில எழுத்தாக்கப் (creative Writing) போட்டியில் தேசிய ரீதியல் தரம் 7 இல் கல்விபயிலும் மகாவித்தியாலய மாணவி மதிவண்ணன். சுமேதா, தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றமைக்கான சிறப்பு பரிசையும் பெற்றுக்கொண்டார்
இதேபோல் 'திருந்திய மகன்' நாடகத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரினது பாராட்டையும் பெற்ற தரம் 7ஐ சேர்ந்த மாணவன் முத்துக்குமார் பிரதீபனுக்கும் சிறப்பு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது வைக்கப்பட்டது. அத்துடன் விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் அதிதிகளால் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
( நன்றி -ரவிப்ரியா புகைப்படங்கள் )























No comments:
Post a Comment