பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குதல்
பதுளையில் ஹப்புத்தளை பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் வீடு வாசல்களையும் உடமைகளையும் உயிர்களையும் இழந்து அகதிகளாக அகதி முகாம்களில் வாழும் மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக நாளை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும் நாளைமறுதினம் 10 மணி முதல் மாலை 6 மணி வரையும் நிவாரணப்பொருட்களை கோட்டைக்கல்லாறு மேற்கு பல்தேவை கட்டடத்தில் சேகரிக்கப்பட்டு மட்டகளப்பு மாவட்ட அரச அதிபரினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பணியில் உங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு வேண்டுகின்றோம். இதன்படி உடுதுணிகள்,உலர்உணவுப்பொருட்கள்,தண்ணீர் போத்தல்கள்,பாடசாலைப்பொருட்கள்,படுக்கைவிரிப்புகள் போன்றவற்றை கையளிக்கலாம்
2004 இல் நாம் சுனாமியால் பாதிக்கப்பட்ட போது பலரும் எமக்கு உதவியதை இச்சமயத்தில் நினைவு கூருவோம்
No comments:
Post a Comment