‘விஜய் 58′ படத்தின் தலைப்பு!… - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, December 11, 2014

‘விஜய் 58′ படத்தின் தலைப்பு!…

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 58வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு இடத்தில் மிகப் பிரம்மாண்டமான அரண்மனை அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக சுமார் 150 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இப்படத்திற்கு இதுவரை எந்தப் பெயரும் வைக்கப்படவில்லை. ஆனால், ‘மாரீசன்’, ‘கருடா’, ‘போர்வாள்’ என மூன்று பெயர்களில் ஒரு பெயர் படத்தின் தலைப்பாக இருக்கும் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. ஆனால், அந்த மூன்றுமே படத்தின் தலைப்பு இல்லையாம். படத்தின் தலைப்பு என்ன என்பதை 2015 ஜனவரி மாதம்தான் அறிவிக்க உள்ளோம் என படத்தின் இயக்குனர் சிம்புதேவன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here