உலகெங்கும் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக ஆயத்தமாகும் காலம் இது. நாளை கிறிஸ்மஸ் என்று உலகமே கொண்டாடும் பெருவிழா.
கடவுள் மனிதனாக மண்ணில் அவதரித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது. எனினும் நாளை ஒவ்வொரு வீடுகளிலும் இயேசு பாலன் பிறப்பும் காட்சியைக் காண முடியும்.
கடந்த 25 நாட்களுக்கு முன்பிருந்தே கிறிஸ்மஸ்க்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆயத்த காலம் திருவருகைக்காலம் என அழைக்கப்படுகிறது.
வரலாற்றிலிருந்தே தொடர்ந்து பின்பற்றப்படும் இந்த நடைமுறைகள் என்னும் என்றும் தொடர்ந்து மென்மேலும் சிறப்புப் பெறுவதை காணமுடிகிறது.
உலகத்தை நோக்கும் போது வரலாற்றில் இடம்பெற்றுள்ள சில பிறப்புகள் உலகத்தையே மாற்றியுள்ளன. அவ்வாறு பிறந்தவர்களில் சிலரது பிறப்புக்கள் வீழ்ச்சிக்கும் சிலரது பிறப்புக்கள் எழுச்சிக்கும் வித்திட்டுள்ளன. அந்த வகையில் கிறிஸ்து பிறப்பு உலகின் எழுச்சியாகவும் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இந்த வகையில் வரலாற்றிற்கே வாழ்வு கொடுத்த பிறப்பு இது.
கிறிஸ்துவின் பிறப்பும் வாழ்வும் அவரது போதனைகளும் மனித வாழ்வின் மீட்பிற்கும், மனமாற்றத்திற்கும், எழுச்சிக்கும் வித்திட்டுள்ளன. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கிறிஸ்துவின் போதனைகள் வழி வகுத்துள்ளன.
இந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அவை அமைந்துள்ளன.
இயேசுவின் பிறப்பைக் குறித்து ஸ்தாபக அருளப்பர் முன்னறிவிக்கையில் “வரப் போகிறவர் மிகப் பெரியவர் அவருடைய வழிகளை செம்மைப்படுத்தவே நான் வந் துள்ளேன் என்றும் அவரே ஒளி.
அந்த ஒளிக்கு சாட்சி பகரவே நான் உள்ளேன்” என்று தெரி விக்கிறார்.
அன்று கிறிஸ்துவின் பிறப்பை எதிர்பார்த்திருந்தவர்கள் அவர் பெரும் செல்வந்த குலத்தில் அல்லது அரச குலத்தி லிருந்து தோன்றுவார் என்றும் அவரது பிறப்பு பிரமாண்ட மானதாக நிகழும் என்று எதிர்பார்த்தனர்.
இந்த இரண்டும் உண்மை என்றாலும் அது மிக எளிமையாகவே இடம்பெற்றது. கிறிஸ்து இந்த உலகில் மனுமகனாக ஏழ்மைக் கோலத்தில் பிறந்ததால் அவர் ஏற்ற தாழ்வின்றி அனைருக்கும் சொந்தமாகிறார்.
கிறிஸ்து பிறப்பின் கொண்டாட்டங்கள் இப்போது வர்த்தகமாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அர்த்தங்களின் மாறி வருகின்றதைக் காண முடிகிறது. இயேசு அன்பையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் வலியுத்தியவர். அதனை உலகில் நிலை நிறுத்துவதற்காகவே தனது வாழ்வையும் தனது உயிரையும் அர்ப் பணித்தவர்.
அத்தகைய அர்ப்பணிப்புகளை இப்போதெல்லாம் பாடல்களிலும். கவிதைகளிலும் கட்டுரைகளிலுமே காணக்கிடைக்கின்றன. எனினும் உண்மை வாழ்வில் அவை அருகிச் செல்வதையே காண முடிகின்றது. “உன்னைப் போல் பிறரையும் நேசிப்பாயாக” என்று ஒருவர் ஒருவருக்கிடையில் இருக்க வேண்டிய அன்பின் பிணைப்பை வெளிப்படுத்தும் இயேசு, ஒருவன் உன் ஒரு கன்னத்தில் அறைந்தால் உன் மறு கன்னத்தையும் அவனுக்குக் காட்டு” என மன்னிப்பின் மகத்துவத்தையும் வலியுறுத்துகின்றார்.
அன்பும் - மன்னிப்பும் மிக முக்கிய மானவை. குடும்ப உறவுகளில் இவை இருக் குமானால் குடும்பங்கள் பிரச்சினைகளின்றி வாழ்வு பெறும். நாட்டில் இது நிலைக்கு மானால் நாடுகளின் பாரிய பிரச்சினைகள் நீங்கி நாடு வளம்பெறும் நாட்டு மக்களும் வளம் பெறுவர்.
திருவருகைக்காலம் இத்தகைய மாற்றங்களை ஒவ்வொரு மனித மனங்களிலும் ஏற்படுத்தும் காலமாகும். அத்தகைய மன மாற்றங்களுக்குப் பின்னர் ஏற்படும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் வெளிப்படும் கொண்டாட்டமாகவே கிறிஸ்மஸ் பண்டிகை அமைய வேண்டும்.
வெறும் வெளி அலங்காரங்களுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையை அடக்கிவிடமால் உள்ளத்தில் இயேசு பிறந்து உயிர் தரும் வாழ்வை பரிசாக்க இந்நாளில் பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment