சுவாமி விவேகானந்தரின் 152 வது ஜனன தின நிகழ்வுகள் இன்று காலை 10 மணியளவில் அறநெறிப்பாடசாலை அதிபர் திரு ந.இராசரெத்தினம் அவர்களின் தலைமையில் கோட்டைக்கல்லாறு தெய்வநெறிக்கழக இந்து சமய நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக திரு K.விக்னேஸ்வரன் (இணைப்பாளர்,விவேகனந்தர் சமூக நலன்புரி அமைப்பு,புதுக்குடியிருப்பு), ஆலய வண்ணக்கர் சார்பில் க.கிருபைராஜா(கணக்கப்பிள்ளை),க.பிரதீஸ்வரன் (பணிப்பாளர் விவேகனந்தர் சமூக நலன்புரி அமைப்பு,புதுக்குடியிருப்பு) ஆகியோரும் , திரு வே தவேந்திரன் (நிருவாக உத்தியோகஸ்தர் பிரதேச செயலகம் களுவாஞ்சிக்குடி) திரு சி.அகிலன் தலைவர்(சமூக உயர் கல்வி சேவைகள் சங்கம்) திரு ஜி.ருத்ராகணேசன் கிராமசேவையாளர், உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் ஆரம்பநிகழ்வாக அதிதிகள் வரவேற்க்கப்பட்டு சுவாமி விவேகானந்தரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் உரையாற்றிய சமூக நலன்புரி அமைப்பின் இணைப்பாளர் திரு K.விக்னேஸ்வரன் இறைவனை நாம் காண வேண்டுமாயின் துன்பப்படும் ஒருவனுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்து அவன் சந்தோசப்படுவானையின் அவனின் முகத்தில் இறைவனை காணலாம் என்றார்.
மேலும் உரையாற்றிய சமூக உயர் கல்வி சேவைகள் சங்க தலைவர் திரு சி.அகிலன் அவர்கள் தனது உரையில் மாணவர்கள் தாம் பயிலும் கல்வியை இறை பக்தியுடனும் குரு பக்தியுடனும் கற்று வாழ்வில் உயரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நிகழ்வின் இறுதியாக அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
No comments:
Post a Comment