அம்பரைவில் பிள்ளையார் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்2015 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 22, 2015

அம்பரைவில் பிள்ளையார் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்2015


ஈழமணித்திருநாட்டில் திருவருட்செல்வங்கள் நிறைந்து விளங்கும் மீன்பாடும் தேனாடாம் மட்டுநகரின் தெற்க்கே ஓடையும், வாவியும் இருபுறமும் அழகுமிகு பாலங்களும் அரணாய் சூழ்ந்த அழகியதீவாம்; பல்துறை நிபுணர்கள் ,கற்றவர்,பல்தொழிலாளர்கள்,சைவ உயர் நெறியாளர்கள் நிறைந்து விளங்கும் கோட்டைக்கல்லாற்றின் மத்தியில் வீற்றிருந்து அருள் பாலித்தருளும் கஜமுகத்தோன் ஸ்ரீ அம்பரைவில் பிள்ளையாருக்கும், பார்வதி பரமேஸ்வரிக்கும் பரிவாரதெய்வங்களுக்கும் வருடாந்த மகோற்சவ திருவிழாவும் மாசிமக தீர்தோற்சவமும் நிகழும் மங்கள கரமான ஜய வருடம் மாசித்திங்கள் 11ம் நாள் (23.02.2015) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஒன்பது தினங்கள் திருவிழாவும் பத்தாம் நாள் சமூத்திர தீர்த்தமும் இடம்பெறும்.

  • கிராம சாந்தி -22.02.2015
  • கொடியேற்றம் -23.02.2015
  • வேட்டைத்திருவிழா- 01.03.2015
  • தீர்த்தோற்சவம்- 04.03.2015



01.03.2015 ஞாயிற்றுக்கிழமை வேட்டைத்திருவிழா கண்ணகை அம்மன் ஆலய வீதியில் இடம்பெறும்.

04.03.2015 புதன்கிழமை காலை பொற்சுண்ணம் ஆலயத்தில் இடம்பெற்று அதனைதொடர்ந்து சமூத்திர தீர்த்தம் நடைபெற்று யாக உத்வாசனம் 
இடம்பெறும். அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் அன்னதானமும் இடம்பெறும்.

04.03.2015 புதன்கிழமை மாலை மூலஸ்தான பூஜை திருப்பொன்னூஞ்சல் கொடியிறக்கம் சண்டேஸ்வரர் உற்சவம் ஆச்சாரியார் உற்சவம் 
ஆசியுரை என்பன இடம்பெறும்.

11ம் நாள் பகல் பூங்காவனத்திருவிழா(05.03.2015) இடம்பெற்று தொடர்ந்து விநாயகருக்கு 1008 அர்ச்சனை நிகழ்வு இடம்பெறும்.

06.03.2015 பகல் பிராயச்சித்த அபிசேகம் இடம்பெற்று அன்று இரவு வைரவர் பூசையுடன் இவ்ஆண்டிற்கான மாசிமகோற்சவ பெருவிழா இனிதே நிறைவுறும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here