கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக்கழகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் வருடாந்த விளையாட்டு விழாவும், திறமை சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் வைபவமும் இன்று(2015.04.4) பிற்பகல் 3 மணியளவில் கோட்டைக்கல்லாறு விளையாட்டு மைதானத்தில் கழகத் தலைவர் திரு நீ.சண்முகப்பிரியன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன்.செல்வராசா அவர்களும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ மா.நடராஜா,பொதுவைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி நா.இதயகுமார், ஆலயங்களின் வண்ணக்கர் திரு சா.திருநாவுக்கரசு உள்ளிட்ட முக்கிய அதிதிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இவ்வைபவமானது மங்கள விளக்கேற்றல், தேசியக்கொடியேற்றல், கழகக்கொடியேற்றல், தேசியகீதம் இசைத்தல் மற்றும் ஒலிம்பிக் தீபமேற்றலுடன் ஆரம்பமானது,
ஆரம்ப நிகழ்வாக சிறார்களுக்கான மிட்டாய் ஓட்டம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து ஆண் பெண் இருபாலருக்குமான ஓட்டங்கள்,சுவாரசிய விளையாட்டுக்களான வணிஸ் சாப்பிடுதல் ,பலூன் ஊதி உடைத்தல்,தலையணை சமர், அலங்கார பானை உடைத்தல் ,போன்ற நிகழ்வுகள் பார்போரை வெகுவாக கவர்ந்தது.
இங்கு உரையாற்றிய அதிதிகளின் உரையில் "உரிய விளையாட்டு மைதானம் இன்மை" எனும் விடயமே முக்கிய இடத்தை பிடித்தது,
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன் செல்வராசா அவர்கள் "மிகவும் கஷ்ரமான சூழ்நிலையில் ஒர் தரமான மைதானம் இல்லாத சூழலிலே ஓர் அழகான விளையாட்டு விழாவை கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக்கழகம் நடாத்தி முடித்திருக்கின்றது'' எனவும் கோட்டைக்கல்லாறு கிராமம் கல்வித்துறையில் தேசிய மட்டம் வரை சாதனை படைக்கக்கூடிய மாணவர்கள் இருக்கின்ற நிலையில் விளையாட்டுத்துறையில் வீர வீராங்கனைகளை உருவாக்கிக்கொள்ள முடியாத அளவுக்கு முடக்கிவைக்கின்ற சூழ்நிலை இக்கிராமத்துக்கு ஏற்பட்டுள்ளது எனவும் இச் சூழ்நிலை மாறவேண்டும் என்பதில் தான் அக்கறையுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் பலர்கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டி பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
இன்றைய நிகழ்வுகள் யாவும் எமது இணையதளத்தினூடாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
No comments:
Post a Comment