கோட்டைவாசல் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த பெருவிழா-2015(VIDEO) - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 14, 2015

கோட்டைவாசல் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த பெருவிழா-2015(VIDEO)

எமது கிராமத்தின் வாயிலாகவும் வரலாற்று சிறப்பும் கொண்ட கோட்டைவாசல்தனில் அமர்ந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளிக்கும் கண்கண்ட தெய்வமாம் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவ பெருவிழா ஆலய தலைவர் திருவாளர் மு.தம்பிராசா அவர்கள் தலைமையில் கடந்த 12.04.2015 பகல் 1 மணியளவில் அபிசேக,அலங்கார, கும்ப பூசையுடன் ஆரம்பமானது.


அன்று பகல் அடியார்களுக்கு அமரத்துவமடைந்த நாராயணபிள்ளை அவர்களின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினரால் அன்னதானமும் வழங்கப்பட்டது. அன்றைய தின இரவுப் பூசையினை இறையடிசேர்ந்த வேலுப்பிள்ளை மகேஸ்வரி நினைவாக அன்னாரின் குடும்பத்தினர் ஆலயத்தில் சிறப்பாக செய்து முடித்தார்.






 பகல் 1 மணியளவில் ஆரம்பமான 2ம் நாள் பூசையினை தொடர்ந்து திரு  மகேந்திரன் பரமேஸ்வரி குடும்ம்பத்தினரால் அன்னதானமும் , இரவுப்பூசை    திரு சுதாகர் வரதசிலோஷினி குடும்பத்தினராலும் சிறப்பாக செய்து  முடிக்கப்பட்டது.










எம்பெருமானின் உற்சவத்தின் இறுதிநாள் பூசை இரவு(2015.04.14) செவ்வாய்க்கிழமை மன்மத வருட 1ம் நாள் இரவு 7 மணியளவில் பொங்கல் 
பூசையுடனும் எம்பெருமான் குடிகொண்டிருக்கும் கிணற்றுக்கு பால் மற்றும் பாணக்கம் வைத்தலுடனும் இவ் ஆண்டிற்கான பெருவிழா இனிதே நிறைவுற்றது.

இங்கு விசேடமாக ஓடை நடுவே அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தெப்பம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.








No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here