கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் இரத்ததான முகாமானது இன்று (2015.04.19) காலை 9.00 மணியளவில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
சங்கத்தின் தலைவர் சி.அகிலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் கௌரவ மா.நடராஜா,ஆலயங்களின் வண்ணக்கர் திருவாளர் சா.திருநாவுக்கரசு, நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் ரமேஷ் குழுவினர் திறம்பட முன்னேடுத்துசென்றனர். இதன் போது எமது கிராமத்தை சேர்ந்த சுமார் 50ற்கும் மேற்பட்ட கொடையாளிகள் ஆர்வத்துடன் கலந்து இரத்ததானம் செய்தது வரவேற்கத்தக்க விடயமாகும்.
இவ் இரத்ததான நிகழ்விற்கான அனுசரணையினை வைத்தியர் அகிலன் சிலோஜினி குடும்பத்தினர் வழங்கினர்.
No comments:
Post a Comment