வாசகர் கடிதங்கள் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 3, 2015

வாசகர் கடிதங்கள்


உலகநாடுகளில் உள்ள பல தமிழ் எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் விழுதல் என்பது எழுகையே என்ற தொடர்கதையை இணையத்தில் வாசித்து வருகிறேன். புல எழுத்தாளர்கள் இணைந்து கதையொன்றை எழுதுவது என்பது ஒரு புது முயற்சியாகும். ஓவ்வொருவரினதும் எழுத்து நடையை அறிந்து கொள்வதற்காகவே இக்கதையை ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன்.ஒரு தமிழ் அகதி என்னென்ன துயரங்களை அனுபவிக்கிறான் என்பதை இக்கதை சொல்லிச் செல்லுகின்றது. இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டுகிறேன்.

சுசீந்திரகுமார் கைலைநாதன்
சவூதி அரேபியா.

----------------------------------------------------------------------------------------------
 இணையத்தளத்தில் வெளிவரும் விழுதல் என்பது எழுகையே என்ற தொடர்கதையை வாசித்து வருகிறேன். நன்றாக இருக்கிறது. சில எழுத்துப்பிழைகள் இருக்கின்றன.
அன்ரனி
தூத்துக்குடி

-----------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
வெளிநாடுகளில் தஞ்சம் பெற்றவர்கள் எப்படி எல்லாம் பல சோதனைகளைக்கடந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பதை ஒளிவுமறைவு இன்றி எழுத்தில் தமது கற்பனைகளையும் கலந்து சுவைபட கூறுகின்ற ஓரு பெரு நாவலாக வளர்ந்து வரும்  விழுதல் என்பது எழுகையே கதையை எழுதம் எழுத்தாளர்கள் அனைவருக்கும் எனது குடும்பம் சார்பான வாழ்த்துக்கள். இக்கதையை வாசித்து வெளிநாடுவரும் எண்ணம் என்னுள் அழிந்துவருகிறது.
நன்றி
பா.கிருபாகரன்  ஆசிரியர்
இலங்கை
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இணையத்தள ஆசிரியருக்கு
ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்வு அன்று நான் இக்கதையை எனது கணனி மூலம் பார்வையிட்டு வருகின்றேன்  இதை பலர் எழுதுவதால் பல்சுவை கிடைக்கிறது. சிலர் விறுவிறுப்பாக எழுதுகிறார்கள் சிலர் சீரியசாக எழுதுகிறார்கள் சிலரது எழுத்து நடை நன்றாக சுவார்சியமாக உள்ளது சிலர் ஒரு மயக்க நிலையில் எழுதுகிறார்கள்ஆனால் எல்லோரது முயற்சிகளும் நன்று நானும் இதில்எழுதமுடியுமா? நான் எழுத்தாளன் அல்ல வாசகனே இருந்தும் ஒரு முயற்சி உங்கள் பதில் தேவை.
திரு.மார்க்கண்டு சடகோபன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
சில கடிதங்கள் சேர்கப்படமுடியவில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றோம். தொடர்ந்து எமக்கு கடிதங்கள் எழுதுங்கள்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here