கோட்டைக்கல்லாறு பிரண்ட்ஷிப் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் சித்திரை புத்தாண்டை வரவேற்கும் முகமாக நாடத்தும் விளையாட்டு போட்டிகள் இன்று காலை 7.00 மணியளவில் கோட்டைக்கல்லாறு கரப்பந்தாட்ட திடலின் முன்பாக கழகத்தலைவர் திரு s.செல்வபதி அவர்கள் தலைமையில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் அதிதிகளாக மாகாணசபை உறுப்பினர் கௌரவ மா.நடராஜா, ஆலயங்களின் வண்ணக்கர் திரு.சா.திருநாவுக்கரசு, மோட்டார்வாகன பரிசோதகர் எந்திரி கோ.மதிவண்ணன், தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் திரு.K.சுரேஷ் மற்றும் கழக போசகர்கள் கழக உறுப்பினர்கள் கழக ஆலோசகர்கள் நலன்விரும்பிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
போட்டிகளின் முதல் நிகழ்வாக மரதன் ஓட்டம் இடம்பெற்றது. இம் மரதன் ஓட்டத்தில் 60ற்கும் மேற்பட்ட துடிப்பான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் 1ம் 2ம் 3ம் இடங்களை செல்வராசா துசியந்தன், கி.கிருஷாந், V.வனுஜன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து நீச்சல் மற்றும் தோணியோட்டம் என்பன இடம்பெற்றது.
நீச்சல்
- 1ம் இடம் அ.அனுகாஷன்
- 2ம் இடம் இரெட்ணம்
- 3ம் இடம் தயானந்தன்
- 1ம் இடம் இரெத்தினசிங்கம் , கந்தசாமி ஜோடிகள்
- 2ம் இடம் காந்தன் , செந்தில்குமார் ஜோடிகள்
- 3ம் இடம் வனுஜன் , தனு ஜோடிகள்
No comments:
Post a Comment