சமீப காலமாக எமது கிராமத்திலும் எமது கிராமத்தை அண்டிய கிராமங்களிலும் பரவலாக இடம்பெறும் சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கை காரணமாக மீன் வளங்கள் குறைவடைந்து வருவது யாவரும் அறிந்ததே!
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள உதவிப்பணிப்பாளர் ருக் ஷான் கலிட்டாஸ் குருஸ், களுவாஞ்சிக்குடி கடற்தொழில் பரிசோதகர் கி.இளஞ்செழியன், அவர்களோடு இணைந்து கோட்டைக்கல்லாறு வடமத்திய கூட்டுறவு மீனவர் சங்க தலைவர் சங்கரன் சுஜராஜ், கிழக்கு கூட்டுறவு மீனவர் சங்க தலைவர் தம்பிராஜா சிவகுமார் ,கி.கூ.மீ சங்க பொருளாளர் சின்னத்துரை சோதிலிங்கம் மற்றும் மீனவர்களும் இணைந்து 2015-05-19 வாவியில் கட்டப்பட்டிருந்த சட்டவிரோத (டிஸ்கோ,நைலோன்) வலைகளை கைப்பற்றியதுடன் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை போலீசார் ஊடாக மேற்கொள்வதாகவும் களுவாஞ்சிக்குடி கடற்தொழில் பரிசோதகர் கி.இளஞ்செழியன் அவர்கள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment