கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருக்கதவு திறத்தல் தொடர்பான பொதுக்கூட்டம் இன்று(2015.06.09) பிற்பகல் 04.30 மணியளவில் ஆலய முன்றலில் பரிபாலன சபைத்தலைவர் திரு நடராஜா சிவகுமார் அவர்கள் தலைமையில் இறைவணக்கத்துடன் ஆரம்பமானது.
இக் கூட்டத்தின் படி எதிர்வரும் 25ம் திகதி இரவு பொதுமக்களின் திருச்சடங்குடன் திருக்கதவு திறக்கப்பட்டு 26ம் திகதி 3ம் வட்டாரமும் 27ம் திகதி 4ம் வட்டாரமும் 28 ம் திகதி 5ம் வட்டாரமும் 29 ம் திகதி 1 ம் வட்டாரமும் 30ம் திகதி 2ம் வட்டார மக்களினாலும் திருச்சடங்கு நடத்தப்படும் எனவும் 01ம் திகதி இரவு திருக்குளிர்தியும் 2ம் திகதி அதிகாலை சமுத்திரத்தில் கும்பம் சொரிதலும் இடம்பெறும் எனவும் இம்முறை குளிர்த்தி பாடுதல் 1ம் வட்டார மக்கள் சார்பில் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment