4வது புனித யாத்திரை - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 26, 2015

4வது புனித யாத்திரை

"யாத்திரை' என்றாலே தூய சிந்தனைகளுடன் இறைவனைப் பற்றிய விஷயங்களைப் பேசிக் கொண்டும், பாடிக் கொண்டும் கோயில்களைத் தரிசிக்க வேண்டும் என்பதே ஆகும் . போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் எந்தக் கோயிலுக்குச் செல்வதானாலும் நடந்து தான் சென்றனர். இதனால் மனம், உடல் புனித தன்மை பெற்றதை அவர்கள் உணர்ந்தனர். யாத்திரை சமயத்தில், பலதரப்பட்ட மனிதர்களுடன் பேசவும், பழகவும் வாய்ப்பு கிடைப்பதால் பரந்த மனப்பான்மையும் உண்டாகிறது. பக்தியின் 
நோக்கமே பரந்த மனம் பெறுவது தான் அந்த வகையில் கதிர்காம கந்தனின் பாதயாத்திரையை அடுத்து கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற தாந்தாமலையுறை ஸ்ரீ முருகன் ஆலயம் நோக்கிய பாதயாத்திரையை குறிப்பிடலாம். எமது கிராமத்து 44 பக்த அடியார்களுடன் 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாத யாத்திரை கடந்த வருடம் 213 அடியார்களுடன்  மிகவும் நேர்த்தியான முறையில் இடம்பெற்று வந்துள்ளமையை குறிப்பிட வேண்டும்.

இப் பாதயாத்திரையின் தொடர்ச்சியாக 4 வது வருட புனிதயாத்திரையானது எதிர்வரும் (2015-07-29) காலை 5 மணியளவில் கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாக உள்ளது. 

இவ் யாத்திரையானது

  1. ஸ்ரீ புற்றடி நாகலிங்கேஸ்வரர் ஆலயம்(கோட்டைக்கல்லாறு)
  2. அரசடிப்பிள்ளையார் ஆலயம்(ஒந்தாச்சிமடம்)
  3. நாகதம்பிரான் ஆலயம்(ஈஸ்டன் தோட்டம் எருவில்)
  4. அற்புத பிள்ளையார் ஆலயம் (களுவாஞ்சிக்குடி)
  5. பிள்ளையார் ஆலயம்(பட்டிருப்பு)
  6. ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயம் (பெரிய போரதீவு)
  7. நரசிங்கர் ஆலயம்(புன்னைக்குளம்)
  8. ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயம் (தும்பங்கேணி)
  9. ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயம் (திக்கோடை)
  10. பிள்ளையார் ஆலயம்-செல்லக்கதிர்காமம் (வாழைக்காலை)


2015-07-29 இரவு வாழைக்காலை பிள்ளையார் ஆலய முன்றலில் தரித்து 2015-07-30 காலை யாத்திரை மீண்டும் தொடங்கும் இப் புனித யாத்திரையில் கலந்துகொள்ளும் ஆண்கள் காவி வேட்டியுடனும் பெண்கள் மஞ்சள் சேலையுடனும் இணைதல் அவசியம்.

இப் புனித பாதயாத்திரையில் கலந்துகொள்ளும் அடியார்களுக்கு அன்னதானம் தாக சாந்தி போன்றவற்றை வழங்கவிரும்புவோர் புனித பாதயாத்திரை ஒன்றியம்(கோட்டைக்கல்லாறு) இணை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு
 0779898006-ராஜு
0770846712- அமலன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here