விமர்சனம் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, August 14, 2015

விமர்சனம்

எழுதக்கூடியவர்களை இனங்கண்டு அவர்களிடம் எழுதும் பணியைக் கொடுத்தமையூம் எனக்கு
மிகவூம் பிடித்திருந்தது.
ஏலையா முருகதாசனுக்கு எப்படி .. இப்படி ஒரு புதுவித சிந்தனை வந்ததோ என்று இன்றுவரை எண்ணியபடி இருக்கிறேன்.எனக்கு எழுதத் தெரியூம். என்பெயர் மட்டும் பத்திரிகையில் வந்தால் போதும் எல்லாப் பெருமையூம் எனக்குமட்டுமே எனும் நினைப்பை மாற்றிய விதம் எனக்கு மிகவூம் பிடித்திருந்தது.
   இப்படி ஒரு உலகளாவிய முயற்சி தமிழ் எழுத்துலகில் வந்ததாகத் தெரியவில்லை.அந்த முயற்சியில்
நானும் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டுவிட்டேன் என்று எண்ணுவதே மிகப் பெருமையாகவூம் ஆத்ம
திருப்தியாகவூம் இருக்கிறது.
    பலபேரின் எண்ண ஓட்டத்தை இந்த முயற்சி ஒன்று சேர்த்தவிட்டது.கதையின் கருவைச் சிதைக்காமல் கதை நிறைவினை எட்டியதும் பாராட்டத்தக்கதே.
   கதையை எழுதிய அனைவரையூம் தனது அன்பால் இ பண்பால் இ பாலம் அமைத்து நின்ற
ஏலையா முருகதாசனை இதயத்தால் வாழ்த்துகின்றேன்.
   நல்ல முயற்சி. புதிய முயற்சி . நாட்டையெல்லாம் இணைத்த முயற்சி.இது போன்று மேலும்
நல்ல முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது எனது அவா அல்ல ... பேரவா ஆகும்.
   உங்கள் முயற்சிகள் யாவூம் வருங்காலங்களில் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனப்
பிரார்த்திக்கின்றேன்.
       " தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம் "
        வாழ்கவளமுடன் !
'விழுதல் என்பது எழுகையே' தொடரில் தாங்கள் இணைந்து எழுதிய போதும்இ இப்பொழுது அக்கதை நிறைவூ பெற்ற போதும் தங்கள் எழுத்துலகப் பார்வைக்கூடாக இத்திட்டம் எழுத்துலகில் புதிய பாதையைத் திறந்திருப்பதை உணர முடிகின்றதா?

நிச்சயமாக புதிய பாதையை திறந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்
உலக நாடுகலெங்கினும் பரந்து பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற எழுத்தாளர்கள் கூடி எழுதிய கதை இந்த விழுதல் என்பது எழுகையே பலவிதமான கலாச்சார விழுமியங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற பலரின் பல வித கோணத்தில் பரந்து பட்டு பார்க்கப்பட்டது புதிய போக்கு புதிய நடை புதிய யூத்தி
புதிய பல ரசனையாளர்களின் மனதையூம் தொட்டிருக்கும் என்பதில் எந்த வித ஐயப்பாடுமில்லை நன்றி

அன்புடன்  இணுவையூர் சக்திதான் - டென்மார்க்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here