பரிசளிப்பு விழாவும் பாண்ட் வாத்திய அரங்கேற்ற நிகழ்வும் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 30, 2015

பரிசளிப்பு விழாவும் பாண்ட் வாத்திய அரங்கேற்ற நிகழ்வும்

கோட்டைக்கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவும் பாண்ட் வாத்திய அரங்கேற்ற நிகழ்வும் வித்தியாலய அதிபர் திரு க.செல்வராஜா அவர்கள் தலைமையில் நேற்று (2015.09.29) பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பாமானது.


 இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மாகாணசபை உறுப்பினர் திரு மா.நடராஜா அவர்களும் பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக திரு எஸ்.ஞானராஜா(பிரதிக்கல்விப் பணிப்பாளர்-பட்டிருப்பு), திரு வி.திரவியராஜா (கோட்டக்கல்வி பணிப்பாளர்), திரு  சா.திருநாவுக்கரசு(ஆலயங்களின் வண்ணக்கர்), DR எம்.குகராசா (மாவட்ட வைத்திய அதிகாரி- பெரியகல்லாறு), வண எப்.ரசிக்குமார் (போதகர் நாற்சதுர சுவிசேச சபை-கோட்டைக்கல்லாறு), திரு அ. மதீஸ்வரன்(பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


சிறார்களின் பேண்ட் வாத்திய முழக்கத்துடன் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர், அதனை அடுத்து பாடசாலைக்கொடி வித்தியாலய அதிபரினாலும் தேசியக்கொடி வலய பணிப்பாளரினாலும் ஏற்றிவைக்கப்பட்டதை அடுத்து அதிதிகள் பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை பார்வையிட்டதை தொடர்ந்து வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமான முறையில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் , பாடசாலைக்கீதம் என்பன இசைக்கப்பட்டு நிகழ்வானது ஆரம்பமானது.












வித்தியாலய அதிபர் தனது தலைமையுரையில் "தான் இப்பாடசாலையை பொறுப்பேற்கும் போது பாடசாலை வளாகம் புழுதி நிறைந்ததாகவும், பாடசாலை நுழைவாயில் சிறியதாக இருந்ததாகவும், வகுப்பறைகள் பிரிப்பு இல்லாமல் காணப்பட்டதாகவும் இதனை நிவர்த்தி செய்வதற்கு பாடசாலை அபிவிருத்திக்குழு திறன்பட செயற்பட்டதாகவும் இப் பாடசாலையில் முதன் முதலாக பாண்ட் வாத்திய குழு இன்று அரங்கேற்றப்பட்டு இருக்கின்ற வேளை இவ் பாண்ட் வாத்தியத்தை பாடசாலைக்கு வழங்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பொன் செல்வராஜா அவர்களுக்கு இவ் வேளையில் தனது நன்றியையும் தெரிவித்தார்.

ஆலயங்களின் வண்ணக்கர் தனது உரையில் ஏனைய பாடசாலைகளின் பேண்ட் வாத்தியம் இசைப்பவர்கள் 2 அல்லது 3 வருடங்களின் பின் பேண்ட் வாத்தியத்தை தொடர்ந்து இசைக்க சந்தர்பம் உள்ளவர்காளாக இருக்க மாட்டார்கள் ஆனால் இப் பாடசாலையை பொறுத்தவரை நீண்ட காலத்துக்கு பேண்ட் வாத்தியம் இசைக்கும் வல்லமை உள்ளவர்காளாக இருப்பார்கள் எனவும் இவ் பேண்ட் வாத்தியத்தை இப் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இன் நிகழ்வில் கலந்து கொள்ளாமையை இட்டு தனது வருத்தத்தையும் தெரிவித்தார்.


பரீட்சைகளில் திறமை சித்தியடைந்த மாணவர்கள் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சிறார்களின் கலை நிகழ்வுகளும் நிகழ்வை அலங்கரித்தது 













பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு எஸ் ஞானராஜா தனது உரையில் இப் பாடசாலையானது  புகழ்பெற்ற  பலஅதிபர்களினால் நிருவகிக்கப்பட்டது, பலம் பொருந்திய பாடசாலை அபிவிருத்தி குழு இருக்கின்றது, இந்நிலையில் இப் பாடசாலையின் உச்ச எல்லையாக தரம்9 அமையக்கூடாது 
என குறிப்பிட்டார்.

பல பாடசாலைகளில் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் இயங்காத நிலையில் இப்பாடசாலையை பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கமே கையேற்று நடாத்துவதையிட்டு மனமகிழ்வதாக வலயக்கல்விப் பணிப்பாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு மா. நடராஜா அவர்கள் உரையாற்றுகையில் தானறிந்த வகையில்  இக் கிராமத்திலுள்ள பல உயர் அதிகாரிகள் தங்கள் ஆரம்பக்கல்வியை இப்பாடசாலையில் தான் பயின்றார்கள் எனவும், கடந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் இரண்டாம் நிலையை எட்டக்கூடிய அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளதை குறிப்பிட்டார்.  





































No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here