பார்த்தேன் பரவசப்பட்டேன் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 24, 2015

பார்த்தேன் பரவசப்பட்டேன்



பார்த்தேன் பரவசப்பட்டேன் என்று தலைப்பிட்டமைக்கு முற்றிலும் தகுதியான பரதநாட்டிய அரங்கேற்றம் ஒன்றை கடந்து 19.09.2015 அன்று ஜேர்மனியிலுள்ள கிறீபாத் என்ற இடத்தில் பார்க்கும் நல்லதொரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

ஜேர்மனி கிறீபீல்ட் நகரத்தில் இயங்கி வரும் ஆடற்கலைமணி திருமதி. றஜனி சத்தியகுமார் அவர்களின் ஆடற்கலாலய  மாணவிகளான செல்விகள்.றஜினாஇ வேவிதா சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒரு முழுமையான அரங்கேற்றமாக நடைபெற்று சபையோரை மகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியது.
கடந்த ஆண்டு ஆடற்கலாலயத்தின் 25வது ஆண்டு விழாவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. இவ்விழாவில் மேடையேறிய அத்தனை நடனங்களும் தரமானவையாகவூம் நேர்த்தியானதாகவூம் இருந்தன. அதில் பங்குபற்றிய அத்தனை மாணவிகளும் மிகச்சிறப்பாகவே நடனமாடியிருந்தார்கள்.
இவர்களுள் ஒரு மாணவி நடனமாடிய போது அவரால் வெளிப்படுத்திய அபிநயமாகட்டும்இமுத்திரைகளின் வெளிப்பாடாகட்டும்இ பாடல்களின் பொருளை உள்வாங்கி அதனை மெய்யூணர்;த்தி நளினத்துடன் ஆடியதைப் பார்த்து வியந்து நான் அவர் யாரென்று விசாரித்த போது அவரினதும் அவரின் சகோதரியினதும் அரங்கேற்றம் இவ்வாண்டு நடைபெறப் போவதாக அறிந்தேன்.
அந்த அரங்கேற்றத்திற்குத்தான் போய் வந்திருந்தேன். இந்த அரங்கேற்றத்தை பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் சென்ற எனக்கு பெருமகிழ்ச்சியே எற்பட்டது. செல்விகள்.றஜினாஇ வேவிதா சகோதரிகள் இருவரும் எவ்வித பதட்டமும் இல்லாமல் பாடல்களையூம் நட்டுவாங்க நெறிப்படுத்தலையூம் மிகவூம் உன்னிப்பாக உள்வாங்கி விநாடிப்பொழுதுகளில் வெளிப்பட்டு நிற்கும் முத்திரைகளையூம் அபிநயத்தையூம் அபாரமாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.
மேடையை முழுமையாக பயன்படுத்தி இவ்விரு சகோதரிகளும் தமக்குள்ளேயே போட்டியாக அதே நேரம் ஒரே நேரத்தில் சிறிதும் பிசகாமல் நடனமாடியதை காண முடிந்தது.
தமது நடனக் குருவான ஆடற்கலைமணி திருமதி. றஜனி சத்தியகுமார் அவர்களிடம் குருபக்தியூடன் கற்ற நடனக் கலையை அன்று மேடையில் வெளிப்படுத்தி நின்றார்கள்.ஒரு கலைமீது கொள்ளும் ஆர்வமும் விருப்பமுமே ஒரு கலைஞனை பிரகாசிக்கச் செய்யூம். அதனை இவ்விரு சகோதரிகளிடமும் காண முடிந்தது.
பாடல்களை மதுரக்குரலோன் திரு. கண்ணன் அவர்கள் பாடினார். பக்கவாத்தியக் கலைஞர்களான  மிருதங்க வித்துவான் சங்கீத இரத்தினம் திரு.ச.பிரணவநாதன் அவர்களும்இ வயலின் வித்துவான் நெய்வேலி திரு.எஸ் இராதாகிருஸ்ணன் அவர்களும் மிகவூம் சிறப்பாக வாசித்தார்கள்.
இன்னுமொரு சிறப்புமிக்க செயலாக திரு. திருமதி. சத்தியகுமார் றஜனி தம்பதிகளின் 17வயதே நிரம்பிய  செல்வன். நிர்மலன் சத்தியகுமார்; தாயின் மேற்பார்வையில் மிகமிகச் சிறப்பாக பல ஆண்டு அனுபவமுள்ன நட்டுவாங்க ஆசிரியர் போன்று மலைப்புக் கொள்ளுமளவிற்கு நட்டுவாங்கம் செய்திருந்தார். இவரின் நட்டவாங்கத்தை இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினர்களில் ஒருவராக பங்கேற்றிருந்த பரதச்சூடாமணி திரு.து.தயாளசிங்கம் வெகுவாகப் பாரட்டியிருந்தார்.
இவ்வரங்கேற்றத்திற்கு பிரதம விருந்தினர்களாக வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி திரு.மு.க.சு: சிவகுமாரன் அவர்களும்இ தமிழக் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களும்இ திரு. எஸ.மனோகரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
செல்விகள்.றஜினாஇ வேவிதா சகேதரிகளின் அற்புதமான நடனம் சபையோரைக் கட்டிப் போட்டது போல் நிகழ்வின் இறுதிவரை மண்டபம் நிறைந்திருந்தது. ஒலியமைப்பு துல்லியமாகவூம் மண்டபத்தின் உள்சூழலுக்கேற்றவாறு அமைந்திருந்தமை பாராட்டப்படக்கூடியதே.இளஞ்சூரியன்  என்ற ஒலியமைப்பாளர்கள் ஒலியமைப்பைச் செய்திருந்தார்கள்.
ஜேர்மனியில் ஒரு புதிய கம்பீரக்குரலோன் அறிமுகமாயிதைப் போல செல்வன்.ரமேஸ் ஜெயகுமார் தனது கம்பீரமான குரலால் அரங்கேற்ற அறிவிப்பைச் செய்து சபையோரின் அவதானிப்புக்கு உள்ளானார். அதே போல கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் ஒரு ஜேர்மனியப் பெண்ணே ஜேர்மன் மொழியிலான அறிவிப்பைச் செய்கிறாரோ என நினைக்குமளவிற்கு மொழிச்சுத்தத்துடனும் கவர்ச்சியான குரல்வளத்துடனும் செல்வி. வந்தனா முருகதாஸ் ஜேர்மன் மொழியில் அறிவிப்பைச் செய்திருந்தார்.
ஒரு அற்புதமான பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் பார்த்த திருப்தியூம் மகிழ்ச்சியூம் எனக்கு ஏற்பட்டுள்ளதுஇ அவர்களிருவரையூம் பாராட்டுகிறேன். அதே வேளை இனி என்ன அரங்கேற்றம் முடிந்துவிட்டதுதானே என ஓயந்திருக்காமல் நடனத்துறையில் இவ்விரு சகோதரிகளும் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டுமென வாழ்த்துகின்றேன்.

ஏலையா க.முருகதாசன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here