பொன்னுத்துரை தாசன் அவர்களுக்கு நன்றி... - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 12, 2016

பொன்னுத்துரை தாசன் அவர்களுக்கு நன்றி...

கடந்த சில தினங்களுக்கு முன் கோட்டைக்கல்லாறு இன்போ வில் எமது கிராமத்து பொது விளையாட்டு மைதானம் போதிய வளங்களின்றி அதன் நிர்மாணப்பணி இடைநடுவே கைவிடப்பட்டநிலையில் காணப்பட்டது தொடர்பில் வெளியான பதிவு யாவரும் அறிந்ததே...

எமது கிராமத்தின் நலனில் அக்கறை கொண்டவரும் எமது மண்ணில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் பொன்னுத்துரை தாசன் அவர்கள் எமது கிராமத்து பொது விளையாட்டு மைதானத்தின் துர்ப்பாக்கிய நிலையை அறிந்து மைதானத்தை  புனர்நிர்மாணம் செய்வதற்காக 36000 ரூபாய் பெறுமதியான மணலினை வழங்கியுள்ளார். இவர் கடந்த காலத்தில் எமது கிராமத்தில் சிறந்த குறுந்தூர ஓட்ட வீரரும் சிறந்த விளையாட்டு வீரருமாவார். அவரின் இப்பங்களிப்பிற்கு எமது கிராமத்து மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதோடு எமது இணையதளம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

இவர் போன்று புலத்தில் வாழும் எம் உறவுகள் சிறு துளியாய்யேனும் உதவினால் எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு மைதானத்தை அமைவது உறுதி




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here