இலங்கையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவம் வாய்ந்த பண்புகள், முக்கியமான அடையாளங்கள், மற்றும் சிறப்புப் பண்புகளை கௌரவித்து அவற்றை வெளிப்படுத்தும் வகையில், 25 வகையான 10 ரூபா நாணயங்களை இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களைச் சித்தரிக்கும் வகையில், 25 விதமான புதிய 10 ரூபா நாணயங்களை இன்று ஸ்ரீலங்கா மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்தில் நல்லூர் ஆலய முகப்பையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா கடற்கரை மற்றும், பாடும் மீன்களையும், கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்களஞ்சியத்தையும், மன்னார் மாவட்டத்தில் மடுமாதா தேவாலயத்தையும், திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர விகாரை, கோணேஸ்வரம் கோவில், பள்ளிவாசல் ஆகியவற்றையும், முல்லைத்தீவு மாவட்டத்தில், மீன்பிடியையும், வவுனியா மாவட்டத்தில், நெல் மற்றும் மரக்கறி உற்பத்தியையும் குறிக்கும் வகையில், இந்த நாணயக் குற்றிகள் அச்சிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment