தனிநபர் ஒரு இளநீராவது குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இளநீர் குடிக்கும் தனிநபர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது தேவை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும். ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறையும். சிறுநீர் எரிச்சல்இ குடல் எரிச்சல்இ உடல் எரிச்சல்இ மலச்சிக்கல் போன்றவற்றை இளநீர் சீராக்கும். இளநீர் பருகுவதால் இளமை தோற்றம் கிடைக்கிறது.
தென்னை மரங்களில் பாளை (பூ) விரிந்த 2 வாரங்களில் ஆண் பூக்கள் மலர்ந்து உதிர்ந்துவிடும். 3–வது வாரம் முதல் பெண் பூக்கள் கருவுறுதல் நிகழ்ந்து பிஞ்சுகளாக வளர தொடங்கும். சுமார் 150 நாட்களில் இருந்து 180 நாட்களுக்குள் நல்ல இளநீராக கிடைக்கும். மேஇ ஜூன் மாதம் மற்றும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நாட்களில் அதிக விலை கொடுத்து வாங்கி இளநீர் குடிக்கிறார்கள்.
இளநீர் நா வறட்சியை போக்கி தாகத்தை தணிக்கிறது. கால்சியம், அயன், மாக்னீசியம், துத்தநாகம் போன்ற தாது சத்துக்கள் இளநீரில் உள்ளது. இதனால் இளநீர் குடிப்பவர்களின் தோல் பளபளப்புடன் இளமையும் காணப்படும் வறண்ட சருமம் தென்படாது.
ஆண், பெண் பருவ கால முகப்பருக்கள் வராமல் தடுக்க இரவு தூங்க போகுமுன் இளநீரை வடிக்கட்டி முகத்தில் நன்கு பூசி துடைக்காமல் தூங்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் நன்கு முகத்தை கழுவி துடைத்து விடவேண்டும். 2 அல்லது 3 வாரங்கள் தொடர்ந்து இதுபோன்று செய்தால் முகப்பருக்கள் வராது. முகசுருக்கம் நீக்கி பளபளப்பாக அழகாக தென்படும்இ சிறுசிறு தழும்புகளும் நீங்கி விடும். உடலில் பூசி கொண்டால் தோல் சுருக்கமின்றி அழகு தோற்றம்தரும். இளமை தோற்றம் அளிக்கும்.
காலையில் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கொழுப்பின் அளவு மிகவும் குறைவு. அதுவும் ரத்தத்துடன் கரையும் கொளஸ்டால் கெடுதல் செய்யாத கொழுப்புவகையாகும். அதனால் இளநீர் குடிப்பவர்கள் எடை பாதுகாக்கப்படுகிறது. பற்கள் பாதுகாப்புக்கும்இ எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான சுண்ணாம்புச்சத்து 29 சதவீதம் இளநீரில் உள்ளது. அயன் சத்து குளோரைடு சத்துகளும் ரத்த விருத்திக்கு உதவுகிறது.
இளநீரில் உள்ள மருத்துவ குணத்தால் சிறுநீரகம் சுத்திகரிக்கப்படுகிறது. சிறுநீரக கல் உறையாமல் பார்த்துக் கொள்கிறது. சிறுநீரகம் சிறப்பாக செயல்பட இளநீர் குடிக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். புகையிலை மதுபானங்களால் உடல் உள் உறுப்புகளில் ஏற்பட்டு உள்ள கெடுதல்கள் சரிசெய்ய தினமும் ஒரு இளநீர் குடிக்க வேண்டும். தினமும் ஒரு இளநீர் குடித்தால் இளமை தோன்றும்.
No comments:
Post a Comment