துளசிச் செடியை ஓர் ஆராக்கியமான மனிதர் தினமும் சாப்பிட்டு வந்தால் குடல், வயிறு, வாய்
தொடர்பான பிரச்சினைகள் அவர் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியையும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.
துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு நம்மை நாடாது. கோடை காலத்தில் வியர்வை நாற்றம் உடலில் அதிகமாக தெரியும். அதனை தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையப் போட்டு வைத்து அடுத்த நாள் அதில் குளித்தால் நாற்றம் இருக்கவே இருக்காது.
துளசி இலையை எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும். சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று சாப்பிடலாம். இதனால் சர்க்கரை அளவு கட்டுப்படும் . மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாததை இந்த அருமருந்தான துளசி செய்து விடும்.
No comments:
Post a Comment