‘கும்கி’ படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கும் புதிய படம் ‘கயல்’. இப்படத்தில் சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். மேலும், வின்சன்ட், ஆர்த்தி, ஜெமினி ராஜேஸ்வரி, யார் கண்ணன், பாரதி கண்ணன், ஜேக்கப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்யா, விக்ரம் பிரபு, விமல், தம்பி ராமையா, சூரி, நடிகைகள் அஞ்சலி, அமலாபால் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது.
படம் குறித்து இயக்குனர் பிரபு சாலமனிடம் கேட்டபோது, சுனாமியால் டிசம்பர் 26, 2004 ம் ஆண்டு உலக வரலாற்றில் கருப்புதினமாக உணரப்பட்டது. அந்த 2004-ம் ஆண்டு நடக்கும் காதல் கதைதான் ‘கயல்’.
உணர்வுகளை கதையின் மூலமும், பார்வைக்கு விஷுவல் மூலம் திருப்திப்படுத்தவும் அதிகமாக உழைத்திருக்கிறோம். படத்தில் ஒரு பயணப் பாடல் வருகிறது. அதற்காக நிறையவே பயணப்பட்டிருக்கிறோம்.
பத்து வினாடிகளே இடம்பெறும் ராஜஸ்தான் காட்சிகள் – மூன்றே மூன்று ஷாட்டுகளுக்காக சிரப்புஞ்சி போனோம். லே, லடாக் போன்ற இடங்களில் மைனஸ் 13 டிகிரி குளிரில் ஐந்து ஷாட் மட்டுமே தேவைக்காக படமாக்கினோம்.
படத்தில் சவுண்டுக்கான முக்கியத்துவத்தை இதில் உணர்வீர்கள். டால்பி அட்மாஸ் விஷயத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். சுனாமி காட்சிகள் நிச்சயம் புது மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். வருகிற டிசம்பர் மாதம் 300 தியேட்டர்களுக்கு மேல் ‘கயல்’ படம் வெளியாக உள்ளது என்றார்.
No comments:
Post a Comment