
பகுதி: 29 - 5.12.2014
எழுதியவர்: திருமதி. தேனம்மை லகஸ்மணன் --- கைதராபாத், இந்தியா
திருமதி.தேனம்மை லக்ஸமணன் பற்றிய அறிமுகம்
வசிப்பிடம்: கைதராபாத், இந்தியா (காரைக்குடி, சென்னை,தமிழ்நாடு)
இளங்கலை வேதியல் பட்டதாரி (B. Sc (Chemistry) முதுநிலை அரசியல் அறிவியல் பட்டதாரி (M.A Political Science)
புத்தக ஆசிரியர்,சுதந்திர எழுத்தாளர்,ஊடகவியலாளர், கவிஞர், வலைப்பதிவர்,சிறப்புப் பேச்சாளர்,வசனகர்த்தா,பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
மூன்று புத்தகங்களின் ஆசிரியர்: “சாதனை அரசிகள்” (போராடி ஜெயித்த பெண்களின் சாதனைக் கதைகள்) “ங்கா” (குழந்தைக் கவிதைகள்) “அன்னப் பட்சி” (கவிதைத் தொகுப்பு)
தினமணி- காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமை, தினமலரில் 4 சிறுகதைகள், குங்குமத்தில் 4 சிறுகதைகள், புதிய தரிசனத்தில் 2 சிறுகதைகள் வெளியாகின.சிறந்த வலைப்பதிவாளராக 25 விருதுகளுக்கு மேல் வாங்கியமை.
இவருடைய வலைப்பதிவில் கதை,கவிதை,கட்டுரை,சினிமா,புத்தக விமர்சனம்,நிகழ்வுப் பகிர்வுகள்,புத்தக வெளியீடுகள், போன்றவை வலைப்பதிவில் பதிவேற்றம் செய்தல் சமையல் குறிப்புகள், இளமைக்கால பள்ளிப்பருவ காலக் கவிதைகளை, சமையல் குறிப்புகளை வலைப்பதிவில் பதிவு செய்தல்.
இதுவரை 1500 கவிதைகளை எழுதியிருக்கிறார்.லேடீஸ் ஸ்பெசல், இவள் பதியவள்,சூரியக்கதிர்,நம் தோழி, குமுதம் பக்தி ஸ்பெஸல் ஆகியவற்றில் கட்டுரைகள் பேட்டிகள் கோலங்கள்.குங்குமத்தில் 4 சிறுகதைகள்,3 கவிதைகள் வெளிவந்துள்ளன.சமையல் குறிப்புகள்,உணவுக் குறிப்புகள் வெளிவந்துள்ளன.
குமுதத்தில் “அம்மா யானை” என்ற தலைப்பில் குழந்தைக் கவிதைகளும் 11 கைக்கூ கவிதைகளும் வெளிவந்துள்ளன.பூஜை அறைக் கோலங்கள் என்ற தலைப்பில் 300 கோலங்கள் வரை வெளிவந்துள்ளன.
குமுதம் கெல்த் ஸ்பெஸலில்( முரஅரவாயஅ ர்நயடவா ளுpநஉயைட ) “மேக்கப்பிற்கு பேக்கப”; என்ற தலைப்பில் இவரின் கருத்து வெளிவந்துள்ளது. ஆனந்தவிகடன் சொல்வனத்தில் 8 கவிதைகள் வெளிவந்துள்ளன. கல்கியில் 4 கவிதைகள் வெளிவந்துள்ளன. இந்தியா ருடேயில் ரஜனி பற்றி இவர் கூறிய கருத்து வெளிவந்துள்ளது. அவள் விகடனில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.தேவதையில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.மல்லிகை மகளில் இரு கவிதைகளும் 9 குட்டிக் கவிதைகளும் வெளியாகியுள்ளன.அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் “மெல்லினம்” இதழில் “பெண் மொழி”என்ற தலைப்பில் 30 கட்டுரைகளும், ஒரு கவிதையும் வெளிவந்துள்ளன.”இணையதள ப்ளாகர்”என்ற தலைப்பில் “நம் உரத்த சிந்தனை”இதழில் இவரைப் பற்றி வெளியாகி உள்ளது.
“சாதனை அரசி” “ங்கா” ஆகிய இவரின் நூல்கள் பற்றிய விமர்சனத்தை திருச்சி தினமலர்”பதிப்பிலும் இந்தியா ருடேயிலும்,லேடீஸ் ஸ்பெஸலிலும் வெளியிட்டுள்ளன.
இவ்விரு நூல்களும் பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இடம்பெற்றுள்ளன.
மக்கள் தொலைக்காட்சியில் சாதனை அரசி நூல் பற்றிய விமர்சனம் இடம்பெற்றிருந்தது, கலைஞர் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் இவர் பங்கு கொண்டிருந்தார்
(குறிப்பு: திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் அவர்களின் கலை இலக்கிய பன்முகத்தளங்களில் இவரின் செயல்பாடுகள் வியப்பைத்தரும் அளவிற்கு மிக அதிகமாகவே உண்டு. அவற்றிலிருந்து பெறப்பட்ட சுருக்கமே இது.முழு விபரத்தையும் காலக்கிரமத்தில் “தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலில் வெளியிடுவோம்.)
தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக.கிட்ணமூர்த்தி
திரு.எலையா முருகதாசன்
(தமிழ் எழுத்தாளர் இணைய அகம்)
------------------------------------------------------------------------------
„விழுதல் என்பது எழுகையே“
பகுதி: 29 --- 5.12.2014
எழுதியவர்: திருமதி. தேனம்மை லகஸ்மணணன் --- கைதராபாத், இந்தியா
பேராசிரியை மங்கையற்கரசி தருமசீலனை சந்திக்கும் ஆவல் ஏற்பட்டது. பத்மகலாவிடம் தொலைபேசி எண்ணை வாங்கி தருமசீலனிடம் தொடர்பு கொண்டு பேசி மறுநாள் சந்திப்பதாகச் சொல்லி இருந்தார். பேராசிரியை மங்கையற்கரசி சுவிசுக்கு வந்திருக்கிறார் என்பதை சீலனால் நம்பமுடியவில்லை. ஆச்சரியத்துடன் „எங்கை தங்கியிருக்கிறீர்கள் நான் வந்து சந்திக்கிறன்“ என்ற சீலன் பேராசிரியை மங்கையற்கரசியிடமிருந்து அவர் தங்கியிருந்த விடுதியின் பெயரையும் வீதியின் பெயரையும் கேட்டு அறிந்து கொள்ளுகிறான்.
வேலையை முடித்துக் கொண்டு வந்து பேராசிரியை மங்கையற்கரசியை அவர் தங்கியிருந்த விடுக்கு வந்த சந்தித்தான் சீலன். மக்டொனாசிலிருந்து வந்திருந்ததனால் முகம் களைத்து எண்ணைத் தன்மையாகவிருந்து.
பேராசிரியை மங்கையற்கரசி விடுதியின் வரவேற்புக்கூடத்தில் சீலனின் வருகைக்கா காத்திருந்தார்.சீலன் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு உறவினரைப் பார்க்க வருவது போல் பேராசிரியை மங்கையற்கரசி அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வருவது வரவேற்புக் கூடத்தின் பெரிய கண்ணாடிச் சுவருக்கூடாகத் தெரியவே பேராசிரியை மங்கையற்கரசியும் தனது இருக்கையைவிட்டு எழுந்து வாசலுக்கு விரைந்தார்.
பேராசிரியை மங்கையற்கரசி சீலனை தனது பிள்ளையைப் போல கட்டியணைத்து மகி;ழ்கிறார். இருவர் கண்ணிலும் கண்ணீர் கசிகிறது.சீலன் மெலிந்திருப்பதாக பேராசிரியை உணர்கிறார்.
„புரொபஸர் உங்களை நான் சந்திப்பன் என்று எதிர்பார்க்கேலை.நீங்கள் பத்மகலாவைப் பார்த்தது சநதோசம்“. ஆர்வத்துடன் தன்னைப் பார்த்து பேசியதைப் பார்த்த போது தனது கண்ணுக்குள் பத்மகலாவைத் தேடியது போல் இருந்தது.
மருத்துவராக வர வேண்டிய இளைஞன் மக்டொனால்ஸில் வேலை செய்கிறானே என மனம் வாடினார் பேராசிரியை மங்கையற்கரசி. ஆனால் மக்டொனால்சில் தான் வேலை செய்வதைப் பற்றி அவன் கலைப்படவில்லை.பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்வது ஐரோப்பாவில் சகஜம். இங்கு தெருக்கூட்டுவதைக்கூட யாருமே கௌரவக் குறைஞ்சலாக நினைப்பதில்லை என சீலன் சொன்னதை பேராசிரியை மங்கையற்கரசி“உண்மைதான்“ என ஏற்றுக் கொண்டார்.
இருவரும் திறமைசாலிகள்.உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்ளு கண்டம் கண்டமாக ஓடும் ஓட்டத்தில் எத்தனை விசயங்கள் முக்கியமானதாக இல்லாமல் போகின்றன.முதலில் வெட்டு விழுவது கல்வியின் மேல்தான்.திருமணம் செய்தால் தொல்லை போச்சு.சீரழிவில் இருந்து காப்பாற்றினாற் போல் ஆச்சு என்று திருமணம் செய்து அனுப்பி விடுகிறார்கள்.ஆணுக்கு மட்டும் அல்ல பெண்ணுக்கும் படிப்பு முக்கியம்.சொந்தக் காலில் நிற்பதும்,சுயமான சிந்தனை என்பதும் சுய விடுதலை என்பதும் இருபாலாருக்கும் கல்வியும் பதவியுந்தான் தரும்.
„சீலன் அவளை நான் பார்த்தேன்.பாதியாக இருக்கிறாள்.இங்கே நீ மறுபாதியாக இருக்கிறாய்.காதல் ஒரு நோய்தான். ஒருவரை மட்டுமல்ல இருவரை ஒரே நேரத்தில் எப்படிப் பீடித்து வாட்டுகிறது.இந்தக் காதல் நிறைவேற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது“
சொல்லுங்கோ புரொபஸர் என்ன வழியுண்டு.எதானாலும் உடன்படுகிறோம்“ஆவல் ஒளிவிட்டது சீலனின் கண்களில் தங்களை ரட்சிக்க வந்த தேவதை போல பேராசிரியை மங்கையற்கரசியைப் பார்த்தான்.
„பத்மகலா கனடாவில் படிக்கத் தொடங்கிவிட்டாள். நானும் அவளிடம் முதலில் படிப்பை முடிக்கச் சொன்னேன்.தற்போது இங்கே வேலை செய்யுங்கள்.நான் திறமையான வெளிநாட்டு மாணவருக்கான கோட்டாவில் உதவித் தொகையுடன் கூடிய மருத்துவப் படிப்பிற்கு என்னுடைய பேராசிரியைக் கோட்டாவில் தமிழகத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் முயற்சி செய்கிறேன்.
படிபு;புத்தான் உண்மையான சுதந்திரத்தைக் கொடுக்கும்.அதன் பின் கிடைக்கும் உத்தியோகம் பதவிதான் முடிவெடுக்கும் தைரியத்தைக் கொடுக்கும்.உங்கள் படிப்பில் இருவரும் முதலில் கவனம் செலுத்துங்கள்.பத்மகலாவின் அக்காவிடமும் திருமணம் செய்வதை சில ஆண்டுகள் ஒத்திப்போடும்படியும் அவளை மருத்துவராக்குவது குடும்பத்துக்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே செய்யும் நன்மை என்றும் கூறியுள்ளேன்.எனவே அவளை நினைத்து இருவரின் காதலும் நிறைவேறுமா நிறைவேறாத என மனம் பதைபதைப்படையாமல் நீங்களும் படிக்கலாம்.இன்னும் மனித குலத்திற்கு நீங்களிருவரும் இணைந்து ஆற்ற வேண்டிய தொண்டு இருக்கிறது.மருத்துவர்களை மட்டுந்தான் எந்தத் தேசமும் வேண்டாம் என்று சொல்வதில்லை இருகரமும் கூப்பி வரவேற்கும்.
இனி எந்த அசம்பாவிதமும் உங்கள் வாழ்வில் தொடராது.இந்த விழுதல் இனி எப்படி மீண்டு எழப்போகிறோம் என்பதை எதிர்நோக்கி இருக்கிறது. நம்பிக்கையுடன் இருங்கள்.நான் தமிழகம் சென்றதும் தொடர்பு கொள்கிறேன் என்றார்.
சீலனின் கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.கல்வியும் கிடைக்கப் போகின்றது,காதலியும் கிடைக்கப் போகின்றாள்.மகத்துவம் வாய்ந்த விசயங்கள் பேராசிரியையின் வரவால் நிகழப் போகின்றன.அவன் ஒன்பதாம் மேகத்தில் மிதப்பவன் போல உணர்ந்தான். காதல் மாயக்காரன் தூரிகை போல இருவெறு தேசத்திலிருக்கும் இதயங்களையும் பாசத்தின் வண்ணங்களால் குழைத்துக் குழைத்து இழைத்துக் கொண்டிருந்தது.
பேராசிரியை மங்கையற்கரசியிடம் சீலன் விடைபெறும் நேரம் வந்தது“புரொபஸர்...“எனத் தயங்கினான் சீலன். „உங்களுடைய உதவிக்கு நன்றி புரொபஸர்....ஆனால் எனக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் அல்லது கனடாவில் படிக்கத்தான் விருப்பம். இப்ப நான் ஜேர்மன் மொழி படித்துக் கொண்டிருக்கிறன்....எனச் சொல்லி முடிப்பதற்குள்“நல்லது நானும் தமிழ்நாட்டில் படிக்க முயற்சி செய்கிறேன்....நீங்களும் முயற்சி செய்யுங்கள் ...எது வசதியோ அதைச் செய்யுங்கள்“ எனச் சொல்ல சீலன் விடைபெற்றுச் செல்லுகிறான்.
(தொடரும்)
No comments:
Post a Comment