கண்ணகி முன்பள்ளி சிறார்களின் கலைநிகழ்வு-2014 (video) - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 7, 2014

கண்ணகி முன்பள்ளி சிறார்களின் கலைநிகழ்வு-2014 (video)

கோட்டைக்கல்லாறு கண்ணகி முன்பள்ளி சிறார்களின் கலைநிகழ்வானது இன்று (2014-12-07) முற்பகல் 9.30 மணியளவில் கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் கண்ணகி முன்பள்ளி பெற்றார் அபிவிருத்தி சங்க தலைவர்  திரு செ.சிவராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.பொன்.செல்வராஜா அவர்களும் விசேட அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ மா.நடராஜா அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஆலயங்களின் வண்ணக்கர் திரு.சா.திருநாவுக்கரசு, திருவள்ளுவர் வித்தியாலய அதிபர் திரு க.செல்வராஜா, கண்ணகி வித்தியாலய அதிபர் திரு .இராஜசேகரன், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி வி.காந்திராஜ், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி அ.சீவரெத்தினம்,  மற்றும் வடக்கு கிராம சேவை உத்தியோகஸ்தர் திரு க.சுரேஷ், பொதுசுகாதார பரிசோதகர் திரு கு.குபேரன், குடும்பநல உத்தியோகஸ்தர் திருமதி பு.விரோஜன் த.நிஷாந்தன் (சமூக உயர் கல்வி சேவைகள் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.


மங்கள விளக்கேற்றலுடனும் இறைவனக்கத்துடனும் ஆரம்பமான இந்நிகழ்வில் சிறார்களின் நடனம்,பேச்சு,பாடல் போன்ற திறமைகள் விழாவை மெருகூட்டியது. இந்நிகழ்வில் தலைமை உரையை நிகழ்த்திய திரு செ.சிவராஜா ஏன் யூதர்கள் உலகில் அதிக புத்திசாலிகளாக இருக்கிறார்கள்? என்றும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஓர் யூத பெண் தனக்கு பிறக்கபோகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக  கர்ப்ப காலத்திலிருந்தே தன்னை தயார் செய்து செய்துகொள்கிறாள். அதுபோல் எமது தாய்மார்களும் தமது பிள்ளைகளில் சிறப்புக்கவனம் எடுக்கவேண்டும் என்றும்,


தொடர்ந்து உரையாற்றிய கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலய அதிபர் திரு க.செல்வராஜா தனது உரையில் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் பாடசாலைக்கு வழங்கப்பட்ட பேண்ட் வாத்தியக்கருவிகளை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.பொன்.செல்வராஜா,ஒளிப்பிரதி இயந்திரத்தை வழங்கிய  மாகாணசபை உறுப்பினர் கௌரவ மா.நடராஜா மற்றும் பாடசாலையின் பெரும் குறையாக இருந்த சமையல் கூடத்தை நிர்மாணிக்க நிதி ஒதுக்கீடு செய்த கௌரவ  மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.


ஆசியுரை வழங்கிய ஆலயங்களின் வண்ணக்கர் திரு.சா.திருநாவுக்கரசு ஐயா அவர்கள் கல்வியாறு எனும் பெயர் மங்காது வருங்கால சிறுவர்கள் காக்க வேண்டும் எனவும் தற்போது கண்ணகி முன்பள்ளி அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு சொந்தமான காணியில் ஒருபகுதியில் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்க ஆவணசெய்வதாகவும் தெரிவித்தார்,


கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர் திரு ஸ்ரீகாந்த் தனது உரையில் எமது பாரம்பரிய கலைகள் வளர்க்கப்பட வேண்டும் எனவும் சிறுவர்கள் சினிமா மோகத்தில் மூழ்கிக்கிடப்பது வேதனைக்குரிய விடயம் எனவும் எதிர்காலத்தில் சினிமா மோகம் களையப்பட்டு சிறந்ததோர் சமூகம்
உருவாக வேண்டும் என்று உரையாற்றினார்.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக வருகை தந்த  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ மா.நடராஜா தனது உரையில் ஆரம்பக்கல்வியை வேதனமின்றி  புகட்டி சிறார்களை வருங்கால மேதைகளாகவும்,தலைவர்களாகவும் மாற்றும் வல்லமையை போதிக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆசியாவின் ஆச்சரியமிக்க நாட்டில் புறந்தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கும் விடயம் எனக்குறிப்பிட்டார்,


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.பொன்.செல்வராஜா தனது உரையில் விஞ்ஞானிகளை விண்ணுக்கு அனுப்புவதைவிட கடினமான காரியம் ஓர் முன்பள்ளி குழந்தையை பயிற்றுவித்து மேடையேற்றுவது எனக்குறிப்பிட்டார்.

அத்துடன் இந்நிகழ்வில் கலந்து திறமைகளை வெளிக்காட்டிய மழலைகளுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.




















































No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here