இயேசு பாலனின் பிறப்பை அறிவிக்கும் நத்தார் ஆராதனைகள் இன்று எமது கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விமர்சையாக இடம்பெற்றது. புனித அருளானந்தர் தேவாலயத்தில் திருபலியானது அருட்பணி அம்புரோஸ் அடிகளினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது . நாட்சதுர சுவிசேஷ சபையில் போதகர் திரு.ரசிகுமார் அவர்களினாலும், கிறிஸ்தவ சபையில் போதகர் திரு.சிட்னி சைமன் அவர்களினாலும் ஆராதனைகள் இடம்பெற்றன .
இங்கு இயேசு பாலனின் பிறப்பின் பெருமையை எடுத்து கூறும் கரோல் கீதங்களும் போதனைகளும் இடம்பெற்றது கூறிப்பிடத்தக்கதாகும் . எமது கிராமத்து கிறிஸ்த்தவ அடியார்கள் பலர் இவ் ஆராதனைகளில் கலந்து கொண்டிருந்தனர்
No comments:
Post a Comment