9.1 இன் வயது 10 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, December 25, 2014

9.1 இன் வயது 10



சுனாமி (Tsunami) என்பது யப்பானிய மொழியில் “harbor wave” (துறைமுக அலை) எனும் அர்த்தமுள்ள சொல்லின் அடிப்படையில், ஆழமான நீர்ப்பரப்பின் அடிப்பகுதியில் உண்டாகும் பூகம்பம் அல்லது பூமியதிர்வு காரணமாக உண்டாகும் இராட்சத அலைகளை குறிப்பிடுகின்றது.
அசாதாரண பூகோள நிகழ்வாகிய சுனாமி பற்றிய பீதி பல காலமாக மனிதரிடையே இருந்து வருகின்றபோதிலும் இந்த நூற்றாண்டில் வாழும் அனைவரையும் பீடிக்கும் அளவிற்கு 2004 ம் ஆண்டு பேரழிவு வரலாற்றில் இடம்பிடித்து விட்டது.
கடந்த 40 வருடங்களில் நடந்திருக்க கூடிய மிகப்பெரும் இயற்கை பேரழிவாக பேசப்படும் டிசம்பர் 26 ம் திகதிய சுனாமி 150, 000 மேலான மனித உயிர்களை பலிகொண்டும், பல பில்லியன் டொலரிலும் மேலான பொருளாதார நஷ்டத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. 1960 ம் வருடத்தின் பின்பு நிகழ்ந்த மிகப்பெரிய சுனாமி என வரலாற்றில் மட்டுமல்ல பூகோள ரீதியிலும் புதிய பதிவுகளையும் வடுக்களையும் பதித்துவிட்ட இயற்கைப் பேரழிவுடன் தொடர்புள்ள தகவல்கள் வருமாறு உள்ளது.
தமிழ் மக்களின் பண்டய இலக்கியங்களில் ஆழிப்பேரலை அல்லது கடல்கோள் என்பது சுனாமியை அர்த்தப்படுவதாக அறியப்படுகின்றது. அத்துடன் இது மூலமாக பழங்கால தமிழர்களினாலும் இத்தகைய பேரழிவுகள் எதிர்கொண்டதினை அறியமுடிகின்றது.இந்த நூற்றாண்டில் 2004 ம் டிசம்பர் 26 ம் திகதிய கடுமையான சுனாமியில் 11 நாடுகளைச் சேர்ந்த 150,000 மக்களின் உயிர்களை உடனடியாகவும் மேலும் பல நூறு உயிகளை அடுத்த சில நாட்களிலும் பறித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.இந்து சமுத்திர பிராந்தியத்தில் குறிப்பாக இந்தோனேசிய நாட்டின் தீவுகளில் ஒன்றாகிய சுமத்திரா எனும் பகுதியில் கடலுக்கடியில் நிகழ்ந்த மிகப்பெரிய பூமியதிர்வு காரணமாக உருவாகிய ஆழிப்பேரலை 
இந்தோனேசியா,இலங்கை,இந்தியா,தாய்லாந்து ,உட்பட பல பிராந்திய நாடுகளைத் தாக்கியது

2004 ம் டிசம்பர் 26 ம் திகதிய கடுமையான சுனாமியால் பதிக்கப்பட்ட பெளதீக தரவுகள்.பூகோளரீதியில் வர்ணிக்கப்படும் முக்கிய 11 தட்டுக்கள் இரண்டில் பலநூறு வருடமாக நெருக்குதல் காரணமாக உருவாகி இருக்கக்கூடிய ஒட்டுமொத்த விசையின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் இந்த நிகழ்வு என சொல்லப்படுகின்றது.
இந்து சமுத்திரத்தின் கடலுக்கடியிலான பூமியதிர்வு இந்தோனேசிய நாட்டின் உள்ளூர் நேரம் காலை 7.58 க்கு நிகழ்ந்தது. பூமியதிர்வு அளவிடும் அலகில் 9.1 எனும் குறியீட்டினால் அழைக்கப் படுகின்றது. இராட்சத வெடிப்பு காரணமாக உருவாகிய அலையின் அதிகபட்ச வேகம் மணிக்கு 1000 கிலோமீற்றராக பதிவாகியுள்ளது. சுமத்திரா சுனாமி 7000 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சீசெல் நாட்டினையும் தாக்கியிருந்தது. மேலும் இந்த பேரழிவின் தாக்கம் இப்படி இருக்கும் என கற்பனையில் கூட பலர் நினைத்திருக்கவில்லை. இந்த கோர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் (26 ஆம் தேதி) 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் நெஞ்சை விட்டு அகலாத இந்த கோர சம்பவம், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கும் இன்னும் அது ஆறாத வடுவாகவே உள்ளது.

எமது கிராமத்தின் பதிவுகள்






No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here