
அன்புடன்
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
யேர்மனி
கொழும்பிலிருந்து டென்மார்க் வரை சீலனுக்கு இதுவரை என்ன நடந்தது???
„விழுதல் என்பது எழுகையே“
„விழுதல் என்பது எழுகையே“
பகுதி 1 இல் இருந்து பகுதி 37 வரை கதையின் சுருக்கம்
இதுவரை....
கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சீலன் என்ற தர்மசீலன் திருவிழாவில் தந்தையின் கையைப்பிடித்து தந்தையின் நடைக்கு ஏற்றவாறு ஓடி ஓடி நடப்பது போல் ஏஜன்சிக்காரனின் வழிநடத்தலில் காற்றடிக்கும் திசையில் பறந்து போகும் சருகாக இலக்கு இல்லா இலக்கு நோக்கி போகிறான்.
விமானத்தினுள் எங்கே போகிறேன் எனத் தெரியாது அவன் மனம் பதை பதைக்கின்றது.....
இங்குதான் இறங்க வேண்டும் என்கிறான் ஏஜன்சி......
இறங்குகிறான், அது ஆஸ்திரியா.........சில நாட்கள் அங்கு.......
இனி எங்கு போவான்...........தெரியாது
தாயின் நினைப்பும் தங்கையின் நினைப்புத்தான் அவனுக்கு ஆறுதல்...
இந்த நினைப்புகளில் இருந்தவனுக்கு.......
சாந்தியின் தற்கொலை திகிலை ஏற்படுத்துகிறது....
ஒருமுறை மனம் தளர்ந்து தளும்புகிறது....
இனி என்ன?
ஆஸ்திரியாவில் இருந்து சூரிச்.....
வீதியோரத்தில் பிச்சைக்காரர்களாய் அந்த நாட்டு மக்களின் ஏளனப் பார்வைக்கு இரையாகி கூனிக்குறுகி...
அவமானப்பட்டு மனம் குறுகினாலும்....
அவர்கள் எங்களை வெறுப்போடு பார்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது.........
இதையும் அவனின் மனம் ஏற்கிறது.....
வந்து குவியும் அகதிகளால் எங்கள் பொருளாதாரம் சீரழிகிறதே...
அவர்கள் அப்படி நினைப்பதில் என்ன தவறு........
அதுவும் கடந்து போகிறது...
சீலனின் கண்ணீரைத் துடைக்கும் கையாக வருகிறார் தவம்...
மனம் மெதுவாக ஆறதலடைய.........பரபரப்பு படபடப்பு அடங்க...
மேகம் கிழித்த நிலவாக காதலி பத்மகலாவின் நினைப்பு மிதமாகிறது.......
அம்மா தங்கை பத்மகலா என உறவுகளின் நினைவுகளில் விடுதி வாழ்வு நகர்கின்றது.
தவத்தார் மூலம் இராமலிங்கத்தின் அறிமுகம்..............சில நாட்கள் விருந்தோம்பலுடன் நட்பு வளர்கின்றது.
இராமலிங்கத்தின் மகளுக்கான தடபுடலான திருமணம்.....
புலம்பெயர் தேசத்தில் அவன் பார்க்கும் முதலாவது திருமணம் இது...
சீலன் படித்த யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த முரளி மணமகனாகிறன்...
தாலியும் கட்டியாயிற்று.......
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சம்பிரதாயங்களையும் கடந்தாயிற்று..
அறைக்குள் போன இராமலிங்கத்தின் புதல்வி முரளியின் மனைவி... மனமொத்த ஆபிரிக்க காதலனை கரம் பிடித்தாள் யன்னல் கடந்து..
திகைத்தான் சீலன்
தலைகுனிந்தார் இராமலிங்கம்
பிடரியைச் சொறிந்து கொண்டு தலையைச் சரித்து புருவத்தை உயர்த்தி கடைவாயில் யாருமே கண்டு கொள்ளாத ஏளனச் சிரிப்புடன் சீலனைப் பார்த்தார் தவத்தார்...
முரளி......?
தாலி கட்டிய கணவன் தலைகுனிந்து மனம் எரிமலையாக கொதிக்க கூனிக்குறுகி நின்றான்..
மன்னிப்புக் கேட்க தகுதியற்று தரம் கெட்டவராய் முரளி முன் கண்ணீரை காணிக்கையாக்கி கையேந்தி யாசகனாய நின்றார் இராமலிங்கம்....
பரவாயில்லை..... இது முரளியின் உதடு
ஒற்றை வரியொன்றை உதடு சொல்ல உள்ளுக்குள் உலைக்களமாக....
கண்களைத் திருப்பிய திசையில் ...... சீலன் நின்றான்..
தனக்கு அறிமுகமானவன்......
பத்மகலாவின் மீது ஆசை கொண்டவன் முரளி
இது சீலனுக்கும் தெரியாது பத்மகலாவிற்கும் தெரியாது......
முரளியின் திட்டம் என்ன?
அவனுக்கு மட்டுந்தான் தெரியும்
நாட்களின் நகர்வில் இராமலிங்கத்தின் மருமகனான ஆபிரிக்க இளைஞன்....
இனி... சீலனின் நிலை?
பேராசிரியரின் சந்திப்பு.....அல்ப்ஸ் மலையடிவாரத்தில் இருவரினதும் நடைப்பொழுதில்
நீ படிக்க வேண்டும்.......மருத்துவப் படிப்புத்தான் முக்கியமா?
காதல் என்ற சுமையை முதகிலிருந்து இறக்கு.பேராசிரியரின் அறிவுரை சீலனின் மூளைக்குள் இடியாய் இறங்கியதா?
அறிவுரை சரிதான்....
ஆனால் காதலை மனதில் சுமந்தான்...
பிரான்சில் சீலனின் அத்தானின் மறைவு!
காரணம்..
அளவுக்கு மீறிய குடி.....
சீலனுக்கு கவலைதான்
தாயின் தங்கையின் நினைப்பு...காதலியின் நினைவுச் சுகம்.......
விட்ட படிப்பை இங்கு தொடரலாமா.......அகதி அந்தஸ்து கிடைக்குமா?
திருப்பி அனுப்பப்படுவேனா..
ஏழாற்றுப் பிரிவில் சிக்கிய படகாய் சுழன்றது அவன் மனம்...
சுழன்ற படகை கைபிடித்து நிறுத்தியது போல் டேவிட்டின் அறிமுகம் சீலனுக்கு கிடைத்து..
அவரின் உதவியால் மக் டொனாசில் வேலை...
வந்த கடன்......அதற்கு வேலை...
எனது படிப்பு.....அடிக்கடி அந்த நினைப்பில்.....ஏக்கங்கள்
பானு என்ற பெண்ணின் அறிமுகம் ...படி என்று அவளும் சொன்னாள்..
காதல்....முதலில் படி
எதிர் எதிரே கோப்பி குடித்தபடி பாணுவும் சீலனும் உரையாடிய பொழுதுகள்
பாணு சொல்லிய அறிவுரைகள். சுவிசிலும் படிக்கலாம் என்ற சீலனின் நம்பிக்கை.........?
தவிடுபொடியானது............
சீலன் கலந்து கொண்ட பிறந்தநாள் போதை நிகழ்வினால்.......
அகதி அந்தஸ்து அங்கீகரித்த நிலையில் ........கத்திக்குத்து சம்பவத்தால்.......தனக்கு ஏதாவது சங்கடம் வருமோ....
சம்பந்தபடாமலே சம்பந்தப்பட்டவனாக நான் ஆவேனா.... பயம் இனி என்ன? இனி என்ன?
அடுத்து என்ன...
அவனுக்குத் தெரியவில்லை...
தவத்தாரின் ஆலோசனை………வேறு வழியில்லா நிர்ப்பந்தம்
இன்னொரு அகதி வாழ்வுக்காய் ..........
டென்மார்க்கில் காலடி வைத்தான்…..
மாரிமுத்துவாய் புதுப்பெயர் கொண்டு……நாட்கள் நகருகின்றன
காதலும் வளருகின்றது……..
காதல்…..படிப்பு…..அம்மா……தங்
எல்லாவற்றுக்கும் மேலாக மாரிமுத்து என்ற நாமம்…
கொழும்பிலிருந்து டென்மார்க் வரை அவனின் பயணம் சந்தித்த சம்பவங்கள்…
இனி…
தனிமைப் பொழுதில்… அவனிருக்கையில்
கலங்காதே …என்றது ஒரு மனம்
முட்டாளே என்றது ஒரு பொழுதில் இன்னொரு மனம்
படி என்றது சில பொழுதுகளில் இன்னொரு மனம்
தெரிந்தவர் குடிக்கும் வேளையில் ……குடிப்பது தவறென்று ஒரு மனம் சொல்ல…
வாழ்க்கை வாழ்வதற்கே…..அனுபவி என்றது இன்னொரு மனம்…..
பத்மகலாவின் அழகிய முகத்தினுள் மறைந்தனரா கரைந்தனரா …அவன் பார்த்த இளம் பெண்கள்
இல்லை….பத்மகலா கரைந்தாளா மறைந்தாளா இவர்கள் முகங்களால்
தமிழகத்து பேராசிரியை படி என்றாரே…..பத்மகலா படிப்பாள் நீயும் படி என்றாரே….
இனி நடக்கப் போவது என்ன?
கண்ணீருடன் புலம்பெயர்ந்தவன் நிலைகுலைந்து தன்னை மறந்து தண்ணீரில் சங்கமமாவானா?.
நீயே என் வசந்தம் என்று சொன்னவன் நீ எனக்கு கசப்பானவள் என்று காதலி பத்மகலாவை தொலைபேசியில் அழைத்துச் சொல்வானா?, அவனைச் சொல்ல வைக்குமா காலம்?
சீலன் சொன்னதைக் கேட்டு அழுது புலம்பினாளா பத்மகலா அல்லது நான் சொல்ல நினைத்ததை நீங்கள் ...இல்லை...நீ சொல்லிவிட்டாய் தாங் யூ வெரிமச்(வுhயமெ லழர எநசல அரஉh) என்று கட்டையாக வெட்டி சுருட்டி விட்ட தலைமுடியை சிலுப்பியபடியே இடக்கையில் இருந்த தொலைபேசியை வலக்கைக்கு மாற்றிய படியே பேசி முடித்ததும் பூல் (குழழட)என்று தொலைபேசியை வைத்தபடியே,
„சிஸ்ரர் வன் கொபி போர் மி இஸ் இற் பொசிபில் „ ( ளுளைவநச ழநெ உழககந கழச அநஇளை வை pழளளiடிடந) என்பாளா பத்மகலா.
„ பூல்“ (குழழட )என்று சொன்னதைக் கேட்டு துடித்தானா சீலன்
அல்லது „போடி மடைச்சி „ என்று கையில் கிளாசுடன் சிரித்தானா சீலன்
படித்து முடித்தானா சீலன் அல்லது பாழ்பட்டுப் போனானா.......
„ என்ன உன் மகன் பெரிய குடிகாரனாகிவிட்டானாமே“
நயாகரா நீர் வீழ்ச்சியின் அழகும்.......மின்னலடித்துப் பாய்ந்து செல்லும் கார்களும் அழகிய வீடுகளும் நிரைநிரையான கடைகளும் சுவைதரும் உணவின் உணவுச்சாலைகளும்...குதூகலச் சிரிப்பும் மாற்றுமா பத்மகலாவை மாறினாளா அவள் மறந்தாளா சீலனை.....
யாழ்ப்பாணத்தில இருந்து வந்த பக்கத்து வீட்டுக்காரி கொழும்பு காலிவீதியில் வைத்துச் சொன்னதைக் கேட்டு சீலனின் தாய் „துடித்தழுதாளா அல்லது இப்பொழுது யார்தான் குடிக்கவில்லை என்றாளா...
மாற்றம் என்ற சொல்லே மாறாதது என்பது போல சுனாமி அனர்த்தம் போல் ஆகியதா இவர்களின் வாழ்வு.
இலட்சியவாதிகளாவார்களா சீலனும் பத்மகலாவும்......திருமணமாகுமா இவர்கள் இருவருக்கும்...
இனி..? பகுதி 38 இல் அடுத்தவாரம் தொடரும்...
No comments:
Post a Comment