உங்களுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்...
அளவற்ற செல்வங்கள் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளன.அவற்றை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் மனக்கண்களைத் திறந்து உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மாபெரும் புதையற்களஞ்சியத்தை தரிசிப்பதுதான். நீங்கள் புகழோடும், மகிழ்ச்சியோடும், அமோகமாகவும் வாழ்வதர்க்குத்தேவையான அனைத்தையும் உங்களுக்குள் இருக்கும் சேமிப்புக் கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
எல்லையற்ற சக்தி நிறைந்த இப்புதயற்களஞ்சியமும், அளவில்லா அன்பும் தங்களுக்குள் இருப்பதை அறிந்து கொள்ளாத மக்கள் பலரும், தங்கள் முழு ஆற்றலை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருந்து விடுகின்றனர். உங்களுக்கு வேண்டிய அனைத்தும் இதிலிருந்து பெற முடியும்.

இது போன்று, மக்களிலும் இருவகையானோர் உள்ளனர்.கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு சக்தி நிரந்த மக்கள் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் இருப்பார்கள். தாங்கள் வெற்றி நடை போட பிறந்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

No comments:
Post a Comment