கோட்டையூரின் நடுவே வீற்றிருந்து அருள் வழங்கும் ஆனைமுகத்தோன் ஸ்ரீ அம்பாறைவில்லானின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 7ம் நாள் திருவிழாவின் சிறப்பு நிகழ்வான திருவேட்டை இன்று இடம்பெற்றது.
இவ் வேட்டைத்திருவிழாவானது பிற்பகல் 4.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எம் பெருமான் வில்லம்பு புடை சூழ சித்திவிநாயகர் ஆலயத்தை நோக்கி புறப்பட்டு அங்கே அமைக்கப்பட்ட காட்டில் வில்லானின் அடியார்கள் வேடுவர்களாக வேடம்தாங்கி மனிதருள் உறைந்திருக்கும் விலங்குத்தன்மையும் குணங்களும் உலகில் உள்ள தீய சக்திகளும், தீய எண்ணங்களும்,ஆணவம் கன்மம் மாயை எனும் மும் மலங்களும் விலங்குகளுக்கு ஒப்பிடப்பட்டு அவை வேட்டையாடப்பட்டன. அதாவது வீடுபேறு என்பது எங்கோ உள்ள ஓர் வெற்றிடமல்ல. அது மனத்தின் உன்னத நிலையில் செருக்கொழிந்த தூய்மையில், ஜீவன் அனுபவிக்கும் புலன் கடந்த ஆனந்த நிலை. இந்தத்தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது இன்றைய வேட்டைத்திருவிழா. திருவேட்டை நிறைவுற்று ஆலயம் திரும்பிய பெருமானுக்கு ஆலயத்தில் பிராயச்சித்த அபிசேகமும் இடம்பெற்றது.
இன்றைய திருவிழாவினை கதிராயி,பத்மினி,பரமேஸ்வரி மற்றும் செல்வமணி குடும்பத்தினர் செய்துமுடித்தனர்
No comments:
Post a Comment