எமது கிராமத்து இணையம் இன்று உலகெலாம் உணர்ந்தறியக் கூடி நிலவைப்போல் நிமிர்ந்து பார்க்க அகிலமெலாம் சோதியாய் பிரகாசிக்கிறது. வாழ்த்துகிறேன்.
-கல்லாறு சதீஷ் -
கோட்டைக் கல்லாறு இணையத்தளம் முதலாவது ஆண்டை நிறைவு செய்து இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இவ்விணையத்தளத்தின் பிரதம ஆசிரியரான செல்வன். நவரோஜ் அருள்பிரகாசம் தனது நண்பர்களுடன் இணைந்து மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார்..
கல்லாறில் நடைபெற்று வரும் பல்வெறு செய்திகளை தூர தேசத்திலிருந்தாலும் எங்களால் உடனுக்குடன் அறியமுடிகிறது.கிழக்கு மாகாணத்தின் வாசனையை நுகர முடிகின்றது.
உலக எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து எழுதி வரும் 'விழுதல் என்பது எழுகையே' என்ற தொடர்கதையை தொடர்ந்து பிரசுரித்து வருவதை இவ்விணையத்தளத்தை வாசிப்போர் நன்கறிவர்.
ஆற்றல்மிகு இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமாக கோட்டைக்கல்லாறு இணையத்தளத்தை தமிழ்ச்சமூகத்திற்காக நடத்தி வருகின்றமைக்காக வாழ்த்திப் பாராட்டுகிறேன்.
அன்புடன்
ஏலையா க.முருகதாசன்
ஜேர்மனி
ஏலையா க.முருகதாசன்
ஜேர்மனி
No comments:
Post a Comment