கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான தெரிவுச்சுற்றானது இன்று (2015.03.21) பிற்பகல் 2 மணியளவில் கோட்டைக்கல்லாறு விளையாட்டு மைதானத்தில் கழக போசகர் கலாநிதி திரு க.நீதிராஜா, திரு ஏ.அருட்பிரகாசம், திரு K இராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது .
வயது அடிப்படையில் ஆண் பெண் இரு பாlலாருக்குமாக ஓட்டம், நீளம் பாய்தல், பரிதி வட்டம் வீசுதல் போன்ற போட்டிகளுக்கான தெரிவுச் சுற்றுகள் இடம்பெற்றன.
இப் போட்டிகளில் அதிக அளவிலான வீர, வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இப் போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர் திரு N.நாகராஜா அவர்கள் ஆரம்பித்து வைக்க, போட்டிகளுக்கான பிரதம நடுவராக திரு V.நமசிவாயம் அவர்களும் திரு ரகுவரன் ,திரு லதாகரன், திரு ஜெய்தனன், திரு உதயலிங்கம், திருமதி சுதாநிதி புவிச்சந்திரன், திரு கி.குருசாந்தன் மற்றும் திரு குபேரன் ஆகியோரும் நடுவனம் வகித்தனர்.
இப் போட்டிகளுக்கான வர்ணனையை திரு சி.சிவலிங்கம் அவர்கள் திறம்பட செய்தார்.இப் போட்டிகளின் தொடர்ச்சி நாளை இடம்பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment