இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் கோட்டைக்கல்லாறு அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்
ஆலயத்தில் பூரணை தின வழிபாடுகள் (2015.03.05) சிறப்பாக இடம்பெற்றன. பகல் 12 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி பூரணகும்பம் நிறுத்தல் முதலிய வழிபாடுகளுடன் அன்றையதின பூரணை சிறப்பு பூசைகள் நிறைவுற்றன.அன்றைய தின பூசை உபயகாரர்களான லோகநேஷன் விமலாமதி குடும்பத்தினரால் அன்னதானமும் வழங்கபட்டது. இது ஆலயத்தில் நடைபெறும் 2வது பூரணை தின சிறப்பு பூசை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment