கிழக்கொளி இணையம் கனடா அமைப்பால் புலமைப்பரிசில் வழங்கி கௌரவிப்பு - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 8, 2015

கிழக்கொளி இணையம் கனடா அமைப்பால் புலமைப்பரிசில் வழங்கி கௌரவிப்பு

கனடா வாழ் புலம்பெயர் உறவுகளின் கிழக்கொளி இணையம் அமைப்பால் 2013/2014 ம் ஆண்டுகளில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் அவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவமானது இன்று (2015.03.08) களுதாவளை கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக திருமதி ந.புள்ளநாயகம்(வலயக்கல்விப் பணிப்பாளர்), கலாநிதி M.கோபாலரெட்ணம் (பிரதேச செயலாளர் MS&EP), திருV.திரவியராஜா (கோட்டக் கல்விப் பணிப்பாளர் MS&EP), திரு.வே.காப்தீபன் (பிரதி வலயக்கல்விப் பணிப்பாளர்,திட்டமிடல்),         திரு.சா.திருநாவுக்கரசு               ( கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் வண்ணக்கர்,தலைவர் விவேகானந்தா சமூக நலன்புரி அமைப்பு),    திரு ப.குணசேகரம் (தலைவர்,திருஞானசம்பந்தர் குருகுலம் களுதாவளை), திரு.வேல்வேந்தன் (தலைவர் - களுதாவளை சுயம்பு லிங்க பிள்ளையார் ஆலயம்), திரு.வே.குணரெட்ணம் (சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்குப்பல்கலைக்கழகம்) மற்றும் பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வானது மு.ப 9.30 மணியளவில் திரு.வேல்வேந்தன் (தலைவர் - களுதாவளை சுயம்பு லிங்க பிள்ளையார் ஆலயம்) அவர்களின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் உரையாற்றிய கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு திரவியராஜா அவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் பலர் தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று சுய நலத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையில், தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதாது தன்  உறவுகளும் வாழ வேண்டும் எனும் நல்லுணர்வுடன் இவ்வாறு சில உறவுகள்  உதவ முன்வருவது மிகவும் பாராட்டத்தக்க விடயம் எனக் குறிப்பிட்டார்.


தொடர்ந்து உரையாற்றிய திரு.வே.குணரெட்ணம் (சிரேஷ்ட விரிவுரையாளர்
கிழக்குப்பல்கலைக்கழகம்) அவர்கள் ஒவ்வொருவரும் தனது உரிமைகளையும் கடமைகளையும் அதிகாரங்களையும் நன்கு உணர்ந்து செயற்படுவோமாக இருந்தால் நல்ல உறவுகளும் நல்ல ஆட்சியும் மலரும் என குறிப்பிட்டார்.




நிகழ்வில்  உரையாற்றிய திரு.சா.திருநாவுக்கரசு (கோட்டைக்கல்லாறு
ஆலயங்களின் வண்ணக்கர்,தலைவர் விவேகானந்தா சமூக நலன்புரி   அமைப்பு)    தனது உரையில்                   பல்கலைக்கழக அனுமதி பெற்ற   மாணவர்களுக்கு   இவ்வாறான           புலமைப்பரிசில்  வழங்குவது        வரவேற்கத்தக்க   செயலாக          இருந்தாலும் பல்கலைக்கழக      அனுமதிக்காக உயர்தரபரிட்சைக்கு  தோற்றும் மாணவர்களுக்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் 
மூலம் இன்னும் பலர் இவ்வாறான புலமைப்பரிசில்களை பெறுவதற்கு தகுதியுடையவர்களாக உள்வாங்கப்படுவார்கள் என குறிப்பிட்டர்.

இறுதியாக உரையாற்றிய கலாநிதி M.கோபாலரெட்ணம் (பிரதேச   செயலாளர் MS&EP) அவர்கள்  மாணவர்களின் அதீத கையடக்க தொலைபேசி பாவனை மாணவர்களின் கல்வி   செயற்பாடுகளை பெரிதும்           பாதிக்கின்றது எனவும் இங்கு வழங்கப்பட்ட நிதியானது புலம்பெயர்உறவுகளின் வியர்வை எனவும்  அதனை தங்கள் கல்வி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பட்டார்.

இப் புலமைப்பரிசில் வழங்கும் வைபவத்தில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் 15 பாடசாலைகளை சேர்ந்த 77 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

அந்த வகையில்  எமது கிராமத்தை சேர்ந்த இராஜநலேந்திரன் கஜேந்தினி மற்றும் செல்வநாயகம் நிதர்சினி எனும் இரு மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.


இவ்விழாவினை கிழக்கொளி இணையம் அமைப்பின் பிரதிநிதிகளான  கலாநிதி க.நீதிராஜா(ஓய்வுநிலை உத்தியோகஸ்தர் கிழக்கு பல்கலைக்கழகம்), திரு புவிராஜ்(ஊடகவியலாளர்), திரு யதுநாதன்(பொதுச்சுகாதார பரிசோதகர்), திரு த.தயாநிதி(நீதிமன்ற உத்தியோகஸ்தர்),  மற்றும் திரு.துரையப்பா(ஓய்வுநிலை நிருவாக உத்தியோகஸ்தர் ) ஆகியோர் முன்னின்று திறம்பட ஒழுங்கமைத்தனர். 


















No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here