கோட்டைக்கல்லாறு அன்புஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலானது ஒன்றியத்தலைவர் திரு சீ.செல்வராஜா அவர்கள் தலைமையில் கோட்டைக்கல்லாறு தெற்கு பல்தேவைக்கட்டத்தில் இன்று(2015.05.02) முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக வைத்திய நிபுணர் நா.இதயகுமார் அவர்களும், திரு க.செல்வராஜா(அதிபர் திருவள்ளுவர் வித்தியாலயம்) அவர்களும் கலந்துகொண்டனர்.
மங்களவிளக்கேற்றல், இறைவணக்கம், ஒன்றியகீதம், என்பனவற்றுடன் ஆரம்பமான நிகழ்வினைத்தொடர்ந்து மறைந்த ஒன்றியத்தின் தலைவர் அமரர் வே.கனகரெத்தினம் அவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரசித்த நொத்தாரிஸ் திரு. வி.பாலாபிஷேகம் அவர்களுக்கு அன்பு ஒன்றியத்தின் வருடாந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது.
சிறார்களின் கலைநிகழ்வுகள் நிகழ்வை உற்சாகமாக முன்னெடுத்து சென்றது மற்றும் திரு ஜீ.பொன்னுத்துரை அவர்களின் குரலில் ஒலித்த "அண்மையில் யாழ்நகர் சென்றிருந்தோம்..." எனும் பாடல் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments:
Post a Comment