கண்ணகைஅம்மன் ஆலய வருடாந்த பாடற்சடங்கு தொடர்பான பொதுக்கூட்டம் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 4, 2015

கண்ணகைஅம்மன் ஆலய வருடாந்த பாடற்சடங்கு தொடர்பான பொதுக்கூட்டம்

கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கண்ணகைஅம்மன் ஆலய வருடாந்த பாடற்சடங்கு தொடர்பான பொதுக்கூட்டம் இன்று(2015.05.04) முற்பகல் 10.45 மணியளவில்  கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் ஆலயங்களின் வண்ணக்கர் திரு.சா. திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

 இக் கூட்டத்தின் படி அம்மனின் திருக்கதவானது எதிர்வரும் 26.05.2015 அன்று திறக்கப்பட்டு வரும் 01.06.2015 அன்று இரவு திருக்குளிர்த்தியுடன் அம்மனின் இவ்வாண்டிற்கான பாடற்சடங்கு நிறைவுறும் எனவும் இம்முறை சுற்றின் படி குளிர்த்தி பாடுதல் இராசாத்திகுடி மற்றும் சடைஞானி குடியினருக்கு என்றும் இப்பாடற்சடங்கு சிறப்பாக நடைபெற கிராமத்து பொதுமக்கள் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் குடித்தலைவர்கள் உள்ளிட்ட கிராமத்து நலனில் அக்கறை கொண்ட பொதுமக்களும்  கலந்து கொண்டனர். 




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here