மென்பந்து சுற்றில் சாதனை படைத்த கோட்டைக்கல்லாறு வீரர்கள் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 25, 2015

மென்பந்து சுற்றில் சாதனை படைத்த கோட்டைக்கல்லாறு வீரர்கள்

யூனியன் அஷ்சுரன்ஸ் இன் அனுசரணையில் நடாத்தப்பட்ட அணிக்கு 11 வீரர்கள் கலந்துகொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்று போட்டியின் இறுதிப்போட்டியானது இன்று (2015.5.25) பெரியகல்லாறு  பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இவ் இறுதிப்போட்டியில் கோட்டைக்கல்லாற்றை பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த 11 வீரர்களும் மகிழூர் பயனியர் விளையாட்டுக்கழக அணியும் இறுதிச் சுற்றை எதிர்கொண்டது.
நாணய சுழற்சியில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்த கோட்டைக்கல்லாறு  அணி 6 ஓவர் களில் 39 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 40 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலெடுத்தாடிய மகிழூர் பயனியர் விளையாட்டுக்கழக அணி கோட்டைக்கல்லாறு  வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்    6 ஓவர்களில் 38 ஓட்டங்களை மட்டுமே  பெற்றுக்கொள்ள கோட்டைக்கல்லாறு அணியினர்  வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தனர். 

இம் மென்பந்து சுற்றில்  எமது பிரதேசத்தை சேர்ந்த பலம் மிக்க 16 அணிகள் கலந்து கொண்டது  குறிப்பிடத்தக்கது.

இவ் வெற்றிக்கு வீரர்களின் சிறப்பான பந்து வீச்சு பாணியும் அவர்களின் ஒற்றுமையுமே காரணமாக அமைந்தது.


    அணியில்  பங்குபற்றிய வீரர்கள் 
  • சுரேஷ்
  • அரவிந்த்
  • விஸ்வராஜ்
  • சர்மின்
  • யனித்
  • சுகுணன்
  • ரூபன்
  • நேஜீத்
  • விஜயகண்ணன்
  • ஜனுஷாந்த்
  • சஞ்சு
  • விபூசன்
  • கர்நீத்
  • அஜந்
  • கனீஸ்ரன்
  • ரஜீவ்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here