2013/2015 ஆம் ஆண்டிற்கான எலகியுசன் பரிசளிப்பு விழாவானது நேற்று (2015.05.04) பிற்பகல் 2.00 மணியளவில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் எலகியுசன் நிலைய பெற்றோர்சங்கத்தின் ஏற்பட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எந்திரி K.பாஸ்கரதாஸ் மற்றும் விசேட அதிதிகளாக ஆலயங்களின் வண்ணக்கர் திருவாளர் சா.திருநாவுக்கரசு, பாடசாலை அதிபர்கள், கிராமசேவகர்கள், பெற்றோர் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறார்களின் அழகிய வரவேற்பு நடனத்துடன் அதிதிகள் அழைத்துவரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வில் எலகியுசன் நிலைய ஆசிரியை திருமதி S.சகுந்தலா அவர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டர்.
சிறார்களின் கலை நிகழ்வுகளும் அவர்களின் ஆங்கில மொழிச்சொல்லாடலும் பார்ப்போரை வெகுவாக கவர்ந்ததோடு பரிட்சைகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment