கவிதைத் தொடர்க் கவிதை 6 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, August 21, 2015

கவிதைத் தொடர்க் கவிதை 6

கவிதைத் தொடர்க்  கவிதை 6
ஆதவன் கதிரேசர்பிள்ளை
டென்மார்க்

மணம் வீசுமே மகிழம்பூவாய் எனினும்
தினமொரு காலநிலை
தினமொரு சலிப்பு நிலை
இனம்புரியா ஏக்கங்கள்
சூளு(ழு)மிப் புலப்பெயர் வாழ்வில்
கனவொன்று கண்டேனடி சகியே
கனவொன்று கண்டேன்.
ஓவியங்கள் சுவரெங்கும் கண் சிமிட்ட
ஓர் கூடம் கலைக்கூடம்
பாரிலெங்கும் நான் பார்த்தறியா
பசுங்கம்பளம் மீதில்
ஆண்களும் சரிநிகர்த்த பெண்களும்
சமமாய்
மனமொத்த காதலெனின்
வாழ முடியூமெனும்
சாதிப்பேயழித்து
அல்லா யேசு சிவன் விஸ்ணு
மேலும் இன்னோரன்ன சின்னச்சிறு
செப்படிவித்தைக் கடவூளரும்
மதவெறியகற்றி
மூட நம்பிக்கைகளை
மூலையில் கொளுத்தி
வீற்றிருந்த நேரமதில்
தேவதையொத்த பெண் உருவொன்று
“இன்று முதல் இலங்கையில்
சோசலிஸ சமவாழ்வூ மலரும்”என
வாழ்த்துச் சொன்ன
அந்தக் கனவிருக்கே
அதை இப்போ நினைத்தாலும்
இனம் புரியா ஏக்கங்கள்

எழுதியவர்: க.ஆதவன்இ டென்மார்க்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here