கவிதைத் தொடர் 5 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 17, 2015

கவிதைத் தொடர் 5

„மலரும் முகம் பார்க்கும் காலம்“


 திருமதி.ரஜனி அன்ரன்\ ஜேர்மனி

தொடுகை இல்லாத் தீண்டலாக
எதுகை மோனை இதமாய் சேர்த்து
உவமை உருவக அணிகள் கோர்த்து
அடுக்கு மொழியூம் எடுப்பு நடையூம்
அழகாய் கோர்ப்பதே அற்புதக்கவி

கருவிற்கு உயிர் கொடுத்து
கற்பனை தேன் கலந்து
ஒப்பனை வளம் சேர்த்து
ஓசையோடு நயமும் தென்றலாகி
ஓலித்து வருமே அழகியகவி

ஏண்ண அலைகளை எழுத்தில் வடிக்க
வண்ண சொற்களை வளமாக்கி
திண்ணமாய் தீட்டும் ஓவியம்
சந்தங்கள் சங்கதிகள் சேர்ந்து
சந்தோசக் கவியாகிப் படையலாகும்

முத்துச் சரங்கள் அட்சரமாகி
முல்லைப் பூக்கள் அச்சாரமாகி
மனதிற்கு மத்தாப்பாய்
மலரும் நினைவூகளாய்-கவி
மணம் வீசுமே மகிழம்பூவாய்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here