கவிதை 7 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 24, 2015

கவிதை 7

திருமதி. பாமா இதயகுமார்
வன்கூவர்  டென்மார்க்
இனம் புரியாத ஏக்கம் 
இறுதிவரை தொடருமா 
கண்ணின் இமையான  தாயவளை
பணிவிடைகள் செய்யாமல்
பாதி வழியில் விட்டு வந்தோம்
ஓடாய் உழைத்த தந்தைக்கு
கடைசிவரை கடமையே  செய்யாமல் 
பாசத்தை கொட்டி வளர்த்த பாட்டன் பாட்டிக்கு 
பயணமே சொல்லாமல் ஓடி வந்தோம்
எங்கிருந்தோ என்னை மனைவியாக்கி
இறுதிவரை இணையான  கணவனுக்கும்
முடிந்தவரை கடமையை செய்யும் பாக்கியம்
இல்லாமல் செய்யமால் போகும்படி
காலதேவன் இடையில் கதையை முடிப்பானோ
இல்லை தேடி வந்து தடுப்பானோ
தேடித் தேடி செய்தவர்களும்
பார்த்துப்  பார்த்து செய்தவர்களும்
போலியாக கூட ஒரு நன்றி
சொல்லாமல் போன வருத்தம்
என்றும் வலியாய்  இதயத்துக்கு
வலி இல்லாத வசந்தங்களை
வர வழி விடு தாயே

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here