கவிதை:8 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, August 26, 2015

கவிதை:8

„மலரும் முகம் பார்க்கும் காலம்“ கவிதைத் தொடர்
கவிதை:8
எழுதியவர் : பா வானதி வேதா. லங்காதிலகம்
 டென்மார்க்

வர வழி விடு தாயே
ஈர முத்தங்களாக இன்பங்களை இனியாவது
அரங்கேறிய துன்பங்கள் எமது வாரிசுகளை
உரசியரசகட்டில் ஏற வேண்டாம்

தாய் மொழியைப் பேணி ஊட்டி
தீய்ந்திடாது நம் பண்பாடு காட்டி
வாய்மையாய் வாழத் திடம் ஊட்டி
சேய்களைத் தரவைரமாக வளர்க்கலாம்

தாயகப் பெருமைஇ சிறுமைகள் அனைத்தையூம்
சேயகத்தில் ஊட்டித் தேசியம் வளர்த்தும்
நாயகனாக (நாயகியாக) முளைவிடும் முல்லை அரும்புகளையூம்
வையகம் போற்றும் விருட்ச வேராக்கலாம்

மனிதனை மனிதனாக மதித்து உண்மையில்
மனிதநேயம் பேணக் கற்றுக் கொடுத்தால்
வனப்பான வாழ்வொழுக்கம் சீராக உயரும்
இனிதான சுவாசம் வானவிற் கனவூகளாயூயரும்

தனமான தன் வார்த்தை செயலில்
கன துணிவூ கொண்டு துன்ப
மனவிருட்டின்  தடமழித்து உற்சாகம் மொண்டு
இன வழியறிவோடு சிகரத்திற்கேகுவோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here