பிரண்ட்ஷிப் விளையாட்டுக்கழகத்தின் 19 வது வருடாந்த விளையாட்டு விழா - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 13, 2015

பிரண்ட்ஷிப் விளையாட்டுக்கழகத்தின் 19 வது வருடாந்த விளையாட்டு விழா

கோட்டைக்கல்லாறு பிரண்ட்ஷிப் விளையாட்டுக்கழகத்தின் 19 வது வருடாந்த விளையாட்டு விழாவானது இன்று(2015.09.13) பிற்பகல் 3 மணியளவில் கோட்டைக்கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பான முறையில் ஆரம்பமானது. 

இன் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், சா.வியாளேந்திரன் ஆகியோரும் மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, இரா.துரைரெட்ணம் ஆகியோரும் ஆலய வண்ணக்கர்,பாடசாலை அதிபர்கள் கிராமஉத்தியோகஸ்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், 

விழாவானது சம்பிரதாய பூர்வமான முறையில் கழகத்தலைவர் செல்வபதி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

இவ் விளையாட்டு விழாவானது பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் சிறார்களின் நடன நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது. கல்வியிலும், விளையாட்டிலும் சாதனை படைத்தோர் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் இவ் விளையாட்டு மைதானத்தினை மேம்படுத்தித் தருவதாக வாக்குறுதியளித்தனர்.



































No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here