CHESS இன் பரிசளிப்பு விழா - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, October 26, 2015

CHESS இன் பரிசளிப்பு விழா

கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் 2014ம் ஆண்டிற்கான  வருடாந்த பரிசளிப்பு விழாவானது நேற்று (25.10.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் சங்கத்தலைவர் திரு வி.சுபேசன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சீ.யோகேஸ்வரன் ஐயா அவர்களும் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு மா.நடராஜா அவர்களும் திரு சி.சண்முகம்(ஓய்வு நிலை அரச அதிபர்),திரு மூ.கோபாலரெத்தினம்(பிரதேச செயலாளர்), திருமதி இராசமணி லதாகரன்(பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலகம் ஆரையம்பதி),எந்திரி பா.விகர்ணன்(நீர்பாசன திணைக்களம்-முல்லைத்தீவு), திரு ஏ.அருள்பிரகாசம்(நிலையைப் பொறுப்பதிகாரி தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புசபை-கோ.கல்லாறு) திரு வி.நமசிவாயம்(ஓய்வு நிலை ஆசிரியர் ஆலோசகர்) திரு சா.திருநாவுக்கரசு(ஆலயங்களின் வண்ணக்கர்-கோ.கல்லாறு) வண எப்.றசிக்குமார்(போதகர் நாற்சதுர சுவிசேஷ சபை-கோ.கல்லாறு) மற்றும் பாடசாலை அதிபர்கள் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பாடசாலை கல்வி செயற்பாடுகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்றோருக்கும்  பரிசில்கள் வழங்கிக்கௌரவிக்கப்பட்டது மட்டுமல்லாது, சமூக செயற்பாடுகளில் தம்மை ஈடு படுத்தியோருக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவம் வழங்கப்பட்டது விசேட அம்சமாக அமைந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திரு சீ.யோகேஸ்வரன் அவர்கள் "கல்லாறு என்றால் அது கல்வியாறு என்றும் இக் கிராமத்தில் இருந்து புலம்பெயர் நாட்டில் வாழும் மக்கள் மிகுந்த சமூக சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றார்கள் எனவும் வறுமையின் காரணமாக கல்வியை தொடர முடியாதவர்களை தமது கவனத்துக்கு கொண்டுவரும்படியும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் திரு மா.நடராஜா அவர்கள் "எமது கிராமத்தில் விளையாட்டு திறனை மேம்படுத்த பல கழகங்கள் செயற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் கல்வி மேம்பாட்டிற்காக எமது கிராமத்தில் செயற்படும்  ஒரே ஒரு அமைப்பாக சமூக உயர்கல்வி சேவைகள் சங்கம் செயற்படுவதை குறிப்பிட்டு கூறினார்.

கொட்டும் மழையிலும் தங்கள் முயற்சியில் சிறிதும் தளராது சிறப்பாக நிகழ்வினை ஒழுங்கமைத்து திறம்பட நடாத்திய சமூக உயர்கல்வி சேவைகள் சங்க உறுப்பினர்கள் அவர்களின் உயரிய நோக்கங்கள் பாராட்டப்படவேண்டிய விடயமாகும்.

குறித்த நிகழ்வுகள் யாவும் மேற்படி சங்கத்தின் உத்தியோக பூர்வ இணையதளமான WWW.KODDAIKALLARCHESS.COM மற்றும்  எமது இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது.













































No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here