"கோட்டையூரின் வரலாறும் வளர்ச்சியும்" நூல் வெளியீட்டு விழா - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 1, 2015

"கோட்டையூரின் வரலாறும் வளர்ச்சியும்" நூல் வெளியீட்டு விழா

எமது கிராமத்தின் வரலாற்றை கூறும் ஓய்வு பெற்ற காணிஉத்தியோகஸ்தரும் சமாதான நீதவானுமாகிய  திரு ந.இராசரெத்தினம் அவர்களின் தேடலில் உருவான "கோட்டையூரின்  வரலாறும் வளர்ச்சியும்" எனும் நூலானது  இன்று(2015.11.01) காலை 10 மணியளவில் கோட்டைக்கல்லாறு கிழக்கு பல்தேவை கட்டடத்தில் ஓய்வு பெற்ற அதிபர் திரு க.நாகலிங்கம் அவர்கள் தலைமையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.


நிகழ்வில் பிரதான அதிதிகளாக மா.நடராஜா(மாகாணசபை உறுப்பினர்  கி.மா ), கலாநிதி M. கோபாலரெத்தினம்(பிரதேச செயலாளர்-ம.தெ.எ. பற்று) மற்றும் அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.











மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்மபமான நிகழ்வில் நூலாசிரியரினால் முதற்பிரதி திரு க.நாகலிங்கம் அவர்களுக்கும்,அதிதிகளுக்கும்  வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டதை தொடர்ந்து நூல் ஆய்வு சைவப்புலவர் K.தங்கவேலயுதன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.






நூலாசிரியர்  திரு ந.இராசரெத்தினம் ஐயா அவர்களின் சேவையினை பாராட்டும் முகமாக சமூக உயர்கல்வி சேவைகள் சங்கம் சார்பாக சங்கத்தலைவர் திரு.வி. சுபேசன் அவர்களினாலும், கோட்டைக்கல்லாறு பொதுமக்கள் சார்பில் திரு சா.திருநாவுக்கரசு அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க  பிரதேச செயலாளர் ,கலாநிதி M. கோபாலரெத்தினம் அவர்களினாலும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.




கோட்டைக்கல்லாறு என்பது ஓர் பழம்பெரும் கிராமம் அதன் வரலாறு நீண்டது இவ் வரலாற்று புதையலில் சிறு பகுதியை தோண்டி அதை நூல் வடிவில் வெளியிட்ட திரு ந.இராசரெத்தினம்  அவர்களின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது.






இன் நூலின் E-BOOK பிரதியினை எமது இணைய தளமூடாக விரைவில் வெளியிடவுள்ளோம்.






No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here