ஆலயங்களின் புதிய வண்ணக்கர் தெரிவு இன்று... - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 8, 2015

ஆலயங்களின் புதிய வண்ணக்கர் தெரிவு இன்று...

எமது கிராம ஆலயங்களின் புதிய வண்ணக்கர் மற்றும் கணக்கப்பிள்ளை தெரிவு தொடர்பான பொதுக்கூட்டமானது இன்று(2015.11.08) காலை 10.30 மணியளவில் முன்னாள் வண்ணக்கர் திரு சா.திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. இறைவணக்கமும் மறைந்த கணக்கப்பிள்ளை அமரர் கணபதிப்பிள்ளை  கிருபைராசா அவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, வண்ணக்கரினால் 2015.06.15 முதல் 2015.11.05  காலப்பகுதி வரையான கணக்கறிக்கையினை வெளியிடப்பட்டதுடன் தனது இராஜனாமா தொடர்பாகவும்  கூட்டத்தில் விபரித்தார்.

அவரின் இராஜனாமா சபையோரினால் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டத்தை தொடர்ந்து புதிய வண்ணக்கர் தெரிவு மற்றும் யாப்பு வரைவு தொடர்பாக கருத்துக்கள் சபையோரினால் தெரிவிக்கப்பட்டது. சில கருத்து வேறுபாடுகள்  காரணமாக சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து கூட்டம் சற்று தாமதமாக  மீண்டும்  இடம்பெற்றது.

பின்னர் முதலில் கணக்கப்பிள்ளை தெரிவு இடம்பெறுவதாகவும் அவர் பதில் வண்ணக்கராக பதவியேற்று அவர் தலைமையில் புதிய வண்ணக்கர் தெரிவு இடம்பெறுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக் கணக்கப்பிள்ளை பதவிக்காக திரு வ.நேசதுரை மற்றும் திரு ஞா.பொன்னுத்துரை  ஆகிய இருவரின் பெயர்களும் முன்மொழியப்பட  திரு வ.நேசதுரை அவர்கள் தன் முன்மொழிவை வாபஸ் பெற்றுக்கொள்ள திரு ஞா.பொன்னுத்துரை புதிய கணக்கப்பிளையாக தெரிவு செய்யப்பட்டார்.

பின்பு  திரு ஞா.பொன்னுத்துரை அவர்கள் பதில் வண்ணக்காரக பதவியேற்று புதிய வண்ணக்கர் தெரிவு இடம்பெற்றது. இப் பதவிக்காக மு.தம்பிராசா மற்றும் திரு சா.திருநாவுக்கரசு ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட இருவரும் தங்கள் முன்மொழிவுகளை வாபஸ் பெற விரும்பாத காரணத்தால் பகிரங்க வாக்கெடுப்பில் திரு மு.தம்பிராசா அவர்கள் பொதுமக்களின் அமோக செல்வாக்கின் காரணமாக புதிய வண்ணக்காரக தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய முன்னாள் வண்ணக்கர் திரு சா.திருநாவுக்கரசு அவர்கள் " இக்கிராம மக்கள்  இதுவரை காலமும் இக்கிராம தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு தனது நன்றிகளையும் , இக்கிராமம் தன்னைப் பொறுத்தவரை தற்பொழுது விழிப்படைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார் "

இன்று புதிதாக தெரிவு செய்யப்பட்ட வண்ணக்கர்  திரு மு.தம்பிராசா  அவர்கள் தனது கன்னி உரையில் " நிருவாக உறுப்பினர்களுடன் இணைந்து உழைத்து எமது கிராமமும் ஆலயங்களும் வளர்ச்சிபெற தன்னால் இயன்ற பணியை செய்வதாக உறுதியளித்தார்" 












No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here