கிராமத்தின் சார்பாக கல்லாறு சதீஸ் அவர்களுக்கு பாராட்டு - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 30, 2016

கிராமத்தின் சார்பாக கல்லாறு சதீஸ் அவர்களுக்கு பாராட்டு

எமது கிராமத்தில் பிறந்து சுவிஸ்லாந்து நாட்டிற்கு புலம்பெயர்ந்து இலக்கிய பணியிலும், வணிகத்துறையிலும் தனக்கென ஓர் தனித்துவமான இடத்தை உலக அரங்கில்  தக்கவைத்து கொண்ட முனைவர் அருள்ராசா நாகேஸ்வரன்(கலாநிதி கல்லாறு சதீஷ் ) அவர்களுக்கு கிராம மக்கள் சார்பாகவும்    திருவள்ளுவர்  விளையாட்டுகழகம் சார்பாகவும் பாராட்டும் கௌரவமும் கடந்த வியாழன்(2016-01-28) அன்று பிற்பகல் 6.30 மணியளவில் கலாநிதி க.நீதிராஜா அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் கலாநிதி கல்லாறு சதீஷ்  அவர்கள்  தான் கடந்துவந்த வலிகளையும்  அதன் மூலம் கிடைத்த வளர்சிகளையும் விபரித்தார். ஒரு மனிதனின் நல்ல பக்கங்களை  பேசிக்கொண்டும் அதை பல மடங்கு பாராட்டியும்  கேட்ட பக்கங்களை மனதுக்குள் விமர்சனம் செய்தும் வாழ்கையை தெரிவுசெய்ய வேண்டும் இவ் வழிமுறைதான் தன்னை மக்கள் மனதில்  கொண்டு சேர்த்ததாகவும்  இதை சகலரும் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

திருவள்ளுவர் விளையாட்டுக்கழகம் எதிர்காலத்தில் ஓர் விளையாட்டுக்கழகமாக  மட்டுமல்லாது ஓர் சிறந்த வியாபார நிறுவனமாகவும் மாற வேண்டும் என  வாழ்த்தினார்

தொடர்ந்து விளையாட்டுக்கழகத்தினரால் பாராட்டுப்பத்திரம் வழங்கி  கலாநிதி கல்லாறு சதீஷ்   அவர்கள் கௌரவிக்கப்பட்டார். 








No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here